சந்திராயன் 2: !  "இந்த உண்மை தெரிந்தால் கண்ணீர் வராது.. மார்த்தட்டி நெஞ்சை நிமிர்த்துவீர்கள்"...! 

சந்திராயன் 2 நிலவை அடையவில்லை என்று தான் அனைவருக்கும் தெரிந்த பொதுவான   கருத்து... அதன் பின் உள்ள சுவாரசிய நிகழ்வுகளும் சவாலான சில விஷயங்களும் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது மிக மிக முக்கியமான ஒன்று...

விண்வெளி ஆராய்ச்சியில் முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்கா அரை நூற்றாண்டுகளுக்கு முன்பே நீல் ஆம்ஸ்ட்ராங்கை நிலவிற்கு அனுப்பி வைத்து உலகையே வியப்பில் ஆழ்த்தியது... அப்படிப்பட்ட அமெரிக்கா கூட நிலவின் தென் துருவ பகுதியில் கால் வைத்ததே  கிடையாது.. என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எந்த ஒரு விண்கலத்தையும் அமெரிக்கா தென்துருவத்தில் அனுப்பியது கிடையாது. அவ்வளவு ஏன் ரஷ்யா சீனா உள்ளிட்ட நாடுகளும் கூட தென்துருவத்தில் எந்த ஒரு விண்கலத்தையும் இறக்கியது கிடையாது. ஆனால் இப்படி ஒரு சவாலான சோதனையில் இறங்கியது இந்தியாதான்...

இப்படி ஒரு சவாலான சோதனையில்  இந்தியா இறங்கி உள்ளதே என, சந்திராயன் 2 ஐ விண்ணில் செலுத்திய நாளான ஜூலை 22 ஆம் தேதி முதலே உலக நாடுகளின் கவனம் இந்தியாவின் மீது திரும்பியது..

குறிப்பாக சீனா இங்கிலாந்து ரஷ்யா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவின் ஒவ்வொரு செயல்பாட்டையும் உன்னிப்பாக கவனித்து வந்தது. ஜூலை 22ம் தேதி அனுப்பிய நாள் முதல் இந்தியா பல வெற்றிகளைக் கண்டது என்பதை யாராலும் மறுக்க முடியாது...

விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியதே முதல் சாதனை....

பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது அடுத்த சாதனை...

ஆகஸ்ட் 14ஆம் தேதி நிலவை நோக்கி சந்திராயன் பயணத்தை தொடங்கியது அடுத்த சாதனை....

செப்டம்பர் 2 ஆம் தேதி சந்திராயன் 2 ஆர்பிட்டரில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்தது அதற்கு அடுத்த  மிகப்பெரிய சாதனை....

இப்படி ஒரு தருணத்தில் கடைசி 3 நிமிடத்தில் சிக்னல் கிடைக்காமல் விக்ரம் சாப்ட் லேண்ட்  ஆனதா..? என கணிக்க முடியாத நிலை உருவானது.

அந்த நிமிடம் முதல் இந்த நொடி வரை ஒவ்வொரு இந்தியன் மனதிலும் இருக்கும் வலி கண்ணீர்  சிந்த வைத்தாலும், வேறு எந்த நாடும் செய்யாத மிக பெரிய சவாலான முயற்சியில் இந்தியா  இறங்கி இப்படி ஒரு சாதனை செய்ததை  நினைத்து மார்தட்டிக்கொள்ளலாம்...

அவ்வளவு ஏன் பிரபல நாசா விஞ்ஞானி ஜெர்ரி லினெங்கர் பகிர்ந்து கொண்ட கருத்து என்ன தெரியுமா..?

"இந்தியாவின் சந்திரயான்-2" என்னை இருக்கையின் விளிம்பில் அமர வைத்து உற்று நோக்க வைத்த ஆச்சர்யமான ஒரு திட்டம். 

இந்த திட்டம் இந்தியாவுக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கே முன் உதாரணமான திட்டம்... இது எங்களுக்கு நிலவை பற்றி மேலும் பல ஆராய்ச்சிக்கு பேருதவியாக இருக்கும்.  

ஹாலிவுட் ம் படமான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம்  எடுக்க செலவிடப்பட்ட  தொகையை விட வெறும் ரூ.978 கோடியில் பட்ஜெட்டில் சந்திரயான்-2  திட்டத்தை இந்திய விஞ்ஞானிகள் செயல்படுத்தி காட்டி உள்ளார்கள் என்றால் அவர்களின் திறமையை கண்டு மெய் சிலிர்க்கிறது என புகழ்ந்து உள்ளார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்..!