உலகம் முழுவதும் ஒரே நாளில் 5400 பேர் பலி..! பாடாய் படுத்தும் கொரோனாவின் நிலவரம்! 

உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நிலைமையை சமாளிக்க  முடியாமல் உலக நாடுகளே திணறுகிறது. அடுத்து என்ன செய்யப்போகிறோம் ? என்ற கேள்வி இப்போதே எழுந்து உள்ளது. கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் போராடி வருகின்றன. ஆனாலும் அது இன்னமும் சோதனை அளவில் தான் உள்ளது.

இருந்தபோதிலும் தனிமைப்படுத்தல் மூலம் கொரோனா தொற்று கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வரும் நிலையில், எந்தெந்த நாட்டில் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதை பார்க்கலாம் 

உலகம் முழுக்க 12,72,737 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.அதில் 69,418 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். நேற்று ஒரே நாளில் 5400 பேர் உலகம் முழுக்க கொரோனாவால் பலியாகி உள்ளனர் என்பது  குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனா காரணமாக 1480 பேர் பலியாகி உள்ளனர். உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிக நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெயின்: 131,646 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஸ்பெயினில் 12641 பேர் பலியாகி உள்ளனர்.

இத்தாலி: 128,948 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 15887 பேர் பலியாகி உள்ளனர்.

ஜெர்மனி: 100,123 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1584 பேர் பலியாகி உள்ளனர்

பிரான்ஸ்: 92,839 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 8078 பேர் பலியாகி உள்ளனர்

ஈரான்: 58,226 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3603 பேர் பலியாகி உள்ளனர

யுனைட்டட் கிங்டம்: 47,806 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 4934 பேர் பலியாகி உள்ளனர்.

துருக்கி: 27,069 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 574பேர் பலியாகி உள்ளனர்.

சுவிஸ்: 21,100 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 715 பேர் பலியாகி உள்ளனர்.

இந்தியாவில் நிலவரம் 

அதிகபட்சமாக  மஹாராஷ்டிராவில் 748 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதற்கு அடுத்த படியாக தமிழ்நாட்டில் 571 பேரும், டெல்லியில் 503 பேரும், தெலங்கானாவில் 334 பேரும், கேரளாவில் 314 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.