உலகிலேயே மிக பெரிய பிரேம் "துபாய்  பிரேம்".. ! 

துபாயில் உள்ள ஜபீல் பூங்கா அருகில் உருவாக்கப்பட்டதுதான் செவ்வக வடிவிலான மிகவும் பிரம்மாண்ட துபாய் பிரேம். இதனை 25 கோடி செலவில் 192 அடி உயரமும் 305 அடி அகலம் கொண்டு உருவாக்கப்பட்டு 
உள்ளது. 

எவ்வளவு தொலைவிலிருந்து பார்த்தாலும் இந்த செவ்வக வடிவ பிரேமுக்குள் துபாய் அடங்கி இருப்பது போன்ற ஒரு தோற்றம் காணப்படும். இந்த பிரேமை இரும்பு தளவாடங்கள், கான்கிரீட் போன்றவற்றால் உருவாக்கப்பட்டுள்ளது. மேற்புறத்தை பொறுத்தவரையில் தங்க நிறத்தில் ஒளிரும் படி உருவாக்கப்பட்டுள்ளது.

உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் குளிரூட்டப்பட்ட கண்ணாடிகளால் உருவாக்கப்பட்ட நடை மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. லிப்ட் வசதியும் இதில் அமைக்கப்பட்டுள்ளது. இதனுடைய சிறப்பு என்னவென்றால் ஒரே நேரத்தில் 200 பேர் வரை மேலிருந்து துபாய் முழுக்க 360 டிகிரி கோணத்தில் பார்க்க முடியும்.துபாயின் அழகை ரசிக்க முடியும்.

உலகிலேயே இப்படி ஒரு பிரேமை ஏற்படுத்தி, இதன் பெருமையை பறைசாற்றும் விதமாக கின்னஸ் சாதனையிலும் இடம்பெற்றுள்ளது. தற்போது உலகின் மிகப்பெரிய பிரேம் என்றால் அது துபாய் பிரேம் தான்  என்பது குறிப்பிடத்தகக்கத்து.

உலகில் எந்த ஒரு புது விஷயம் கண்டுபிடிக்கப்பட்டாலும், அதனை   தங்கள் நாட்டில் முதலில் அறிமுகப்படுத்தி விடுவது அரேபிய  நாடுகளின் ஸ்டைல் என்றே சொல்லலாம். காரணம் பண பலம். எதனையும் சாதிக்க, எதனையும் விலை கொடுத்து வாங்க துபாய் அரசு தயாராக உள்ளது என்பது உலகறிந்த உண்மை..