டீசல் நிரப்பும் போது "டிரைவரை பற்றிய தீ"..! மளமளவென எரிந்த நெருப்போடு ஓடும் திக் திக்  வீடியோ..!

சென்னை அடுத்த செம்பரப்பக்கம் மாவட்டத்தில் பெட்ரோல் பங்க் ஒன்றில் கண்டெய்னர் லாரியில்  டீசல் நிரப்பி கொண்டிருந்தபோது டிரைவர் மீது திடீரென தீப்பற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பூவிருந்தவல்லியை அடுத்து உள்ளது  செம்பரம்பாக்கம் என்ற பகுதி. இங்கு உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் கண்டெய்னர் லாரி டிரைவர் வண்டிக்கு டீசல் நிரப்ப சொல்லி கேட்டுள்ளார். அப்போது டீசல் பம்ப்பை டிரைவரே பிடித்துக்கொண்டு நின்றுள்ளார். அந்த ஒரு தருணத்தில் யாரும் எதிர்பாராதவிதமாக டேங்கில் இருந்து வெளியேறிய தீ டிரைவரின் உடலில் பற்றி எரிந்தது.

பின்னர் அங்கிருந்து தீயோடு ஓடி சென்ற நபரை அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். பின்னர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தீப்பற்றி எரிந்த லாரி டிரைவர் உத்தரபிரதேச மாநிலம் கேரை என்ற பகுதியில் வசிக்கக்கூடிய ராஜேஷ் குமார் சிங் என விசாரணையில் தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோவை பார்க்க: முதல்வன் பட பாணியில் ரியல் காட்சி..அலறி ஓடிய டிரைவர்..! வீடியோ