மனிதர்களின் மனநிலையை பற்றியும் மிக குறிப்பாக மன அழுத்தம், உடல் உறுப்புகள் பாதிப்பு, இதுபோன்ற விஷயங்களில் யாருக்கெல்லாம் அதிக பாதிப்பு ஏற்படுகிறது? மிக எளிதாக நோய் தொற்று ஏற்படக்கூடிய வயதினர் யார்? எதற்காக ஆரோக்கிய பாதிப்பு ஏற்படுகிறது? இது போன்ற பல்வேறு ஆராய்ச்சிகளை பல்வேறு நிறுவனங்கள் நடத்தி, அது குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டு வருகின்றன.

அந்த வகையில் சைக்காலஜி மற்றும் குவாலிட்டி அடிப்படையில் நடத்திய ஆய்வறிக்கையில், ஆண்களைவிட பெண்களுக்கு அடிக்கடி ஒருவிதமான கனவு வருகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது சுமார் 3 ஆயிரம் பேர் பெயரில் நடத்தப்பட்ட ஆய்வில், 16 வயது முதல் 32 வயதிற்குள் இருக்கும் பெண்கள் அவர்களுடைய கனவில் தாம்பத்தியம் பற்றிய விஷயம் வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் சுமார் 100 நாட்களில் குறைந்தபட்சம் முப்பது நாட்களாவது இதுபோன்ற கனவை பெண்கள் காண்கின்றனர். ஆம்.... இது தவிர கடந்த 1996ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இதேபோன்ற ஆய்வில் அப்போதைய நிலவரப்படி, இது போன்ற கனவு பெண்களுக்கு மிக குறைவாகவே இருந்துள்ளது. அப்படி என்றால் தற்போது மட்டும் எப்படி இது போன்ற கனவு பெண்களுக்கு அதிகரிக்கும் என்ற கேள்வி எழுகிறது. இதை ஆராய்ந்த போது இன்றைய பெண்கள் பெண்ணியம் மற்றும் தாம்பத்தியம் குறித்த வெளிப்படைத்தன்மையை பேசுவதும் அது குறித்து சிந்திப்பதுமே காரணம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.