கடல் அலையில் செல்ஃபி எடுத்த மருத்துவர் ரம்யா பரிதாப உயிரிழப்பு..! அதிர்ச்சி சம்பவம்..!   

செல்பி எடுக்கும் போது இதுவரை எத்தனையோ விபத்துக்கள் ஏற்பட்டு இருந்தாலும்... இன்றளவும் ஆர்வம் குறையாமல் செல்பி மோகத்தில் மூழ்கிய பெண் டாக்டர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருபவர் ஆந்திரமாநிலம் ஜக்கையாபேட்டையை சேர்ந்த ரம்யா கிருஷ்ணன் என்பவர் மாலைப் பொழுதில் நடைப்பயிற்சி மேற்கொள்வதும் பொழுதுபோக்கிற்காக கடற்கரைக்கு சென்று வருவதும் வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை கோவா கடற்கரைக்கு சென்று சிறிது நேரம் தனது தோழிகளுடன் கடலலையில் விளையாடிய பின் அப்போது செல்பி எடுக்க முயன்றுள்ளார்.

ஆனால் எதிர்பாராத விதமாக சற்று உயர்வாக எழுந்த அலையில் சிக்கி  நிலை தடுமாறி கீழே விழுந்த ரம்யா கிருஷ்ணா, கடல் அலையில் மூழ்கி உள்ளே இழுத்து செல்லப்பட்டு உள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் சப்தமிடவே அருகில் இருந்த மீனவர்கள் மருத்துவர் ரம்யாகிருஷ்ணனை காப்பாற்ற முயற்சி செய்தனர்.

சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு அவரை சடலமாகவே மீட்கப்பட்டது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. பின்னர் ரம்யாவின் உடலை கைப்பற்றிய போலீசார், அவரது உடலை சொந்த ஊரான ஆந்திர மாநிலம் ஜக்கையாபேட்டைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.