இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் இங்கே காணலாம்.

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது.

தனது இடது கையினால் ஆசனம் போட்டால், ஆயுள் குறைவு. தனது இடது கையினால் எண்ணெய் தேய்த்துக் கொண்டால் புத்திர நாசம். இடது கையால் சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும். தனது இடது கையால் படுக்கையை போட்டால் இருப்பிடம் சேதமாகும். எனவே கண்டிப்பாக இடது கையால்  மரணத்துக்கு கூட இது போன்ற விஷயங்களை செய்து விடாதீர்கள்.

ஜோதிடர், குரு, நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர், சந்நியாசி முதலியவர்களுக்கு அவர்களுடைய ஆபத்துக் காலத்தில் கண்டிப்பாக உதவ வேண்டும்.

சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையிலிருந்தால் அவர்களுக்கு உதவ வேண்டும். அண்ணியை தினசரி வணங்க வேண்டும்.

நாம் வெளியில் செல்லும் போது, தேர், நெய்க்குடம், வில்வம்,வேம்பு இவைகள் எதிரில் குறுக்கிட்டால் வலது புறம் சுற்றி செல்ல வேண்டும்.

ஒரு கையை தரையில் ஊன்றிக்கொண்டு சாப்பிடக்கூடாது. துணியில்லாமல் குளிக்கக்கூடாது. சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக்கூடாது. கன்றுக்குட்டியின் கயிறை தாண்டக்கூடாது. மழை பெய்யும் போது ஓடக் கூடாது.

தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கக் கூடாது. நெருப்பை வாயால் ஊதக்கூடாது.

மலஜலம் கழிக்கும் போது இரவில் தெற்கு முகமாகவும் மற்ற நேரங்களில் வடக்கு முகமாகவும் கழிக்க வேண்டும். கிழக்கு மேற்கு முகமாக உட்கார்ந்து மலஜலம் கழிக்கக்கூடாது.

மேற்குறிப்பிட்ட சில விஷயங்களை பார்க்கும் போது, ஒரு சிலருக்கு சிரிக்க  தோன்றும். ஆனால் இவை அனைத்தும் நம் முன்னோர்கள் கடைபிடித்து வளமான வாழ்க்கையை வாழ்ந்து உள்ளனர்.