Asianet News TamilAsianet News Tamil

நீங்கள் பேசும் போது "இந்த வார்த்தையை" மட்டும் சொல்லிடாதீங்க... அப்படியே நடந்துவிடும்..!

நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே ஆவோம் என்பதை நீங்கள் கேள்வி பட்டிருப்பீர்கள் அல்லவா..? ஆம் அதுதான் உண்மை..

dont use specific words with others
Author
Chennai, First Published Mar 16, 2019, 6:12 PM IST

நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே ஆவோம் என்பதை நீங்கள் கேள்வி பட்டிருப்பீர்கள் அல்லவா..? ஆம் அதுதான் உண்மை..

அதுமட்டுமல்லாமல், சாதாரணமா பேசும் போதே... எப்படி இருக்கீங்க என்று கேட்டாலே,அதற்கான பதில் கீழே உள்ளவாறு இருக்கும். என்னத்த சொல்ல.. ஏதோ இருக்கோம் அவ்ளோ தான்..எனக்கு தலை எழுத்தே சரியில்லை, கெட்டவங்க எல்லாம் நல்லாதான் இருக்காங்க.. நாங்க மட்டும் இவ்ளோ கஷ்டப்படுகிறோம். கடவுளுக்கு கண்ணில்லையா.? இப்படியெல்லாம் பேசுவார்கள்.

இப்படி எதற்கெடுத்தாலும் இது போன்ற பதில்களை சொல்லும் போது , அது நம் ஆழ்மனதில் இருந்து தான் வருகிறது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். எந்த ஒரு சொல்லை நாம் ஆழ்மனதில் இருந்து சொல்கிறோமோ அந்த வரத்தை ஒரு நாள் அப்படியே நடக்கும். அதுதான் அந்த வார்த்தைக்கு  உண்டான சக்தி. எப்படினு கேட்டகிறீர்களா..?

dont use specific words with others

அதாவது, நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு வாரத்தை ஒரு லட்சம் தடவை சொல்லிவிட்டோம் என்றால், அந்த ஒரு வார்த்தை சக்தி பெற்று விடும். பின்னர் அந்த வார்த்தை என்னமோ, அது  நடந்தே தீரும். எனவே நாம் எந்த  ஒரு கஷ்ட காலத்தில் இருந்தாலும், நாம் பயன்படுத்தும் வார்த்தை மிகவும் நல்ல வார்த்தையாக இருக்க வேண்டும். நல்ல சொல்லை மீண்டும் மீண்டும் உச்சரிக்கும் போது அந்த வார்த்தை சக்தி பெற்று நல்லதே நடக்கும் என்பதை உணர வேண்டும்.

உதாரணத்திற்கு, உங்களை பார்த்து  நல்லா இருக்கீங்கா என கேட்டால், எனக்கென்ன  நான் நலமாக இருக்கேன்.. எந்த குறையும் இல்லாமல் இருக்கேன். மகிழ்ச்சியாக இருக்கோம் என சொல்லி பழக  தொடங்குங்கள். அதே போன்று  நீங்கள் அடைய விரும்பும் ஒன்றை பற்றி அடிக்கடி பேசுங்கள். அந்த சொல்லை தொடர்ந்து உச்சரித்து வாருங்கள். கண்டிப்பாக அந்த வார்த்தை சக்தி பெற்று  நல்லது நடந்தே தீரும். 

dont use specific words with others

இதை விட்டுவிட்டு எப்போதும் கவலையாகவும், மற்றவர்கள் பொறாமை படுவார்கள் என நினைத்து தம்மிடம் எதுவும் இல்லாதது போலவும் , வாழ்க்கையில் எதையும் அனுபவிக்க வில்லை என்ற கோணத்தில் பதில் அளித்தும் திரும்ப திரும்ப அதே வார்த்தையை பேசும் போது உண்மையில் நம் வாழ்கை பெரிதும் பாதிக்கும். எனவே நல்லதே நினைத்து, நல்லதையே பேச வேண்டும் என்பதை புரிந்துகொள்ள  வேண்டும் 

Follow Us:
Download App:
  • android
  • ios