குழந்தைகளுக்கு முகக்கவசம் தேவையா? ரெம்டெசிவிர், ஸ்டீராய்ட், சிடி ஸ்கேன் செய்யலாமா? மத்திய அரசு விளக்கம்.!
கொரோனா சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் ரெம்டெசிவிர் மற்றும் இதர அங்கீகாரம் பெற்ற மருந்துகள் எதுவும் குழந்தைகளுக்குக் கொடுக்க பரிந்துரைக்கவில்லை. 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ரெம்டெசிவிரின் பயன்பாடு பாதுகாப்பானது என்பது தொடர்பாக எந்த உறுதியான தகவல்களும் கிடைக்கவில்லை.
இந்தியாவில் 5 வயது அல்லது அதற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு முகக்கவசம் முகக்கவசம் அணிய தேவையில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா 2வது அலையின் தாக்கம் குறைந்துவருகிறது. இருப்பினும் கொரோனா 3வது அலை ஏற்படும் என நிபுணர்கள் கூறிவருகின்றனர். இந்த 3வது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என சில நிபுணர்களும், குழந்தைகளை அதிகம் பாதிக்காது என சில நிபுணர்களும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான புதிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் ரெம்டெசிவிர் மற்றும் இதர அங்கீகாரம் பெற்ற மருந்துகள் எதுவும் குழந்தைகளுக்குக் கொடுக்க பரிந்துரைக்கவில்லை. 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ரெம்டெசிவிரின் பயன்பாடு பாதுகாப்பானது என்பது தொடர்பாக எந்த உறுதியான தகவல்களும் கிடைக்கவில்லை. அறிகுறி இல்லாத அல்லது கொரோனாபாதிப்பு குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு ஸ்டீராய்ட் மருந்துகள் கொடுக்கக்கூடாது. அது உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும்.
மேலும், 5 வயது மற்றும் அதற்குட்பட்ட வயதுடைய குழந்தைகள் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது அவசியமில்லை. அதுபோல 6 முதல் 11 வயதுடைய குழந்தைகள், பெற்றோரின் வழிகாட்டுதலின் அடிப்படையில், முகக்கவசம் அணியலாம். 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு கட்டப்படுத்தும் அளவில் மட்டுமே சி.டி ஸ்கேன்களை எடுக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது.