"தொழில் ரகசியத்தை" வெளியில் சொல்லக்கூடாத ராசியினர் யார் தெரியுமா..?

மேஷ ராசி நேயர்களே...!

வெற்றி வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உடன்பிறப்புகள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். நீண்ட நாள் பிரச்சனை ஒன்று விரைவாக முடியும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

ரிஷப ராசி நேயர்களே...!

நினைத்தது நிறைவேறும் நாள். ஆடை ஆபரணம் வாங்கி சேர்ப்பீர்கள். பெற்றோர் வழியில் சில நன்மை நடக்கும். வாகன பழுதுகளை நீக்கி புதிய வாகனம் வாங்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

மிதுன ராசி நேயர்களே...!

மதிப்பும் மரியாதையும் உயரும். இல்லத்தில் இனிய காரியங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்த பணவரவு இருக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும் .எந்த ஒரு காரியத்தையும் நிதானமாக யோசனை செய்து முடிவு எடுப்பது மிகவும் நல்லது.வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். வெளியிடங்களுக்கு செல்லும் போது கவனமாக இருப்பது நல்லது.

காதுக்கு இனிமையான செய்தி..! தங்கம் விலை குறைந்து விட்டது...!

சிம்ம ராசி நேயர்களே...!

நினைத்த காரியம் நிறைவேறும் நீங்கள் தேடி செல்ல நினைத்த உங்கள் நண்பர் உங்கள் வீட்டிற்கு வருவார். உங்களது தொழில் ரகசியங்களை வெளியில் சொல்லாமல் இருந்தால் மிகவும் நல்லது. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

கன்னி ராசி நேயர்களே...!

வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும் நாளாக இருக்கும். பிரியமான சிலரிடம் மனதை விட்டு பேசுவீர்கள். நீண்ட தூர பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். புதிய தொழில் தொடங்க வாய்ப்புகள் கூடிவரும். வருமானம் போதுமானதாக இருக்கும்.உங்கள் திறமை வெளிப்படும்

விருச்சக ராசி நேயர்களே...!

நினைத்தது நிறைவேறும் நாள். வருங்கால நலன்கருதி ஓர் முக்கிய திட்டத்தை நிறைவேற்றுவீர்கள்.தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு உங்களது நண்பர் உதவி செய்வார். உறவினர்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள்.வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

தனுசு ராசி நேயர்களே...!

நல்லவர்களின் தொடர்பால் உங்களுக்கு பல நல்ல விஷயம் நடைபெறும். அதிகார பதவியில் உள்ளவர்களின் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு. தொழில் மேலதிகாரிகளின் பாராட்டு பெற்று நிம்மதியாக இருப்பீர்கள்.

மகர ராசி நேயர்களே...!

கல்யாண வாய்ப்பு வரும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாளாக இருந்த பிரச்சினை ஒன்றுக்கு தீர்வு கிடைக்கும். குடும்ப சுமை அதிகரிக்கும். கடன் சுமை குறையும்.

கும்பராசி நேயர்களே...!

ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவதால் சிலரின் அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம். உதவி செய்வதாக சொன்னவர்கள் கூட கடைசி நேரத்தில் உங்களுக்கு உதவி செய்யாமல் போகலாம்.

மீனராசி நேயர்களே...!

இன்று உங்களுக்கு சந்தோஷம் அதிகரிக்கும் நாள். பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். இடம் வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சி நன்மை பயக்கும். திருமணப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும்.