House : தெற்கு பார்த்த வீடு ராசியில்லையா? வாஸ்து என்ன சொல்கிறது? உண்மை என்ன?
House: தெற்கு பார்த்த வீடு வாங்கப் பலரும் தயங்குவார்கள். கிழக்கு, மேற்கு, வடக்கு போல தெற்கு திசை வீடுகள் நல்லதல்லவா? தெற்கு பார்த்த வீடு குறித்து வாஸ்து சாஸ்திரம் உண்மையில் என்ன சொல்கிறது?

தெற்கு திசை வீடும், வாஸ்து உண்மைகளும்!
புதிய வீடு கட்டுபவர்களும், வீடு வாங்குபவர்களும் முதலில் கவனிப்பது வீட்டின் திசையைத் தான். அதில் குறிப்பாக, தெற்கு பார்த்த வீடுகள் என்றாலே பலருக்கும் ஒருவிதத் தயக்கமும் பயமும் ஏற்படுவது வழக்கம். தெற்கு நோக்கி தலைவாசல் இருந்தால் வீட்டில் செல்வம் தங்காது, பல சிக்கல்கள் வரும் என்ற எண்ணமே இதற்குக் காரணம். ஆனால், தெற்கு பார்த்த வீடுகள் கெட்டவை அல்ல என்பதே வாஸ்து சாஸ்திரத்தின் உண்மையான கருத்தாகும்.
வாஸ்து சாஸ்திரத்தின் எந்தவொரு மூல நூலிலும் எந்தத் திசையும் முழுமையாக அசுபமானது எனக் குறிப்பிடப்படவில்லை என்கின்றனர் வாஸ்து நிபுணர்கள். வீடு எந்தத் திசையைப் பார்த்துள்ளது என்பதை விட, அந்தத் திசையில் தலைவாசல் சரியான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளதா என்பதே மிகவும் முக்கியம்.
இதன்படி, தெற்கு திசைச் சுவரை 8 அல்லது 9 சம பாகங்களாகப் பிரித்தால், அதன் மையப் பகுதிகளான S3 மற்றும் S4 ஆகிய இடங்களில் தலைவாசல் அமைப்பது மிகவும் சிறப்பானது. சரியான இந்த இடத்தில் வாசல் அமையும்போது, அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்; தன்னம்பிக்கை பெருகும். மேலும், தொழில் மற்றும் உத்தியோகத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் உண்டாகும். அதேசமயம், தெற்கு திசையின் தென்மேற்கு மூலைக்கு அருகில் தலைவாசல் அமைப்பதை மட்டும் தவிர்ப்பது நல்லது என வாஸ்து சாஸ்திரம் அறிவுறுத்துகிறது.
இதையும் படிங்க : Keezhadi : 2,000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் செய்த அந்த செயல்! உலகமே வியந்து பார்க்கும் சாதனை!
பிரதான கதவு விஷயத்தில் கவனிக்க வேண்டியவை!
தெற்கு பார்த்த வீட்டிற்கு பிரதான கதவை அமைக்கும் போது சில விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள மற்ற கதவுகளை விட பிரதான கதவு சற்று பெரிதாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும். கதவை திறக்கும் போது வீட்டின் உட்புறமாக திறக்கும்படி அமைத்துக் கொள்ள வேண்டும். திறக்கும் போதும், மூடும் போதும் சத்தங்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பிரதான கதவு அருகில் சரியான வெளிச்சம் இருக்க வேண்டும். தெற்கு, மேற்கு பக்க சுவர்கள் உறுதியாகவும், உயரமாகவும் இருக்க வேண்டும் என்பது வாஸ்து நம்பிக்கை. வடக்கு, கிழக்கு பக்கம் அதிக காலி இடம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டில் சமையலறை தென்கிழக்கிலும், வீட்டின் பெரியவர்களின் படுக்கையறை தென்மேற்கிலும், பூஜை அறை வடகிழக்கிலும் இருப்பது நல்லது என சொல்வார்கள். வீட்டிற்குள் காற்றும், வெளிச்சமும் நன்றாக வரும்படி அமைப்பு இருக்க வேண்டும்.
இதையும் படிங்க : Wedding Gift : மாப்பிள்ளைகளுக்கு ரூ.2 கோடி பண மாலை! 100 அடி நீளத்தில் வியக்க வைத்த பரிசு!
தெற்கு பார்த்த வீட்டில் இந்த தவறுகளை செய்யாதீர்கள்!
ஏற்கனவே தெற்கு பார்த்த வீடு உள்ளவர்கள் கவலைப்பட தேவையில்லை என வாஸ்து வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். வாஸ்து என்ற பெயரில் வீட்டை இடிப்பது, பிரதான கதவை மாற்றுவது போன்ற வேலைகளை அவசரப்பட்டு செய்யக் கூடாது. வீட்டின் பிரதான கதவுக்கு எதிரே குப்பை, செருப்புகள், தடைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பெரிய தூண்கள் அல்லது மற்ற பொருட்கள் கதவுக்கு எதிரே இல்லாமல் கவனமாக இருக்க வேண்டும். தெற்கு திசையில் பூமிக்கு அடியில் தண்ணீர் டேங்க், போர் அல்லது ஆழமான குழிகள் அமைக்கக் கூடாது என வாஸ்து கூறுகிறது. அந்த திசையில் சுவர்கள் உறுதியாக இருக்க வேண்டும். பிரதான கதவு அருகில் இருட்டு இல்லாமல் போதுமான வெளிச்சம் அமைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் இவை அனைத்தும் வாஸ்து சாஸ்திரத்தில் உள்ள பாரம்பரிய நம்பிக்கைகள் மட்டுமே. இவற்றுக்கு அறிவியல் ஆதாரங்கள் உள்ளன என்று சொல்ல முடியாது. வீட்டின் அமைப்பில் காற்று, வெளிச்சம், பாதுகாப்பு, வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே முக்கியம்.
இதையும் படிங்க : GTA 6 : இலவச பணம், ஆயுதங்கள், கார்கள் பெறுவது எப்படி? 61 சீட் கோடுகள் இதோ!
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.















