மறந்தும் கூட வாழைப்பழம் அருகில் இதை வைத்து விடாதீர்கள்...! இப்படி ஒரு பாதிப்பை  உருவாக்கும் உஷார்..! 

நம் வீட்டில் உணவு பொருட்களை எப்படி வைக்க வேண்டும் என்பதில் கூட ஒரு முறை உண்டு. ஆனால் அது நம்மவர்களுக்கு அவ்வளவாக தெரிவது கிடையாது. எதை வாங்கினாலும் அப்படியே கொண்டு சென்று வீட்டில் ஒரு ஓரத்தில் வைத்து விடுவோம் அல்லது அனைத்து காய்கறிகளையும் ஒன்றாக சேர்த்து வைத்துவிடுவோம். மற்றொரு பக்கம் பழங்கள் இருந்தால் அது மட்டும் தனியாக வைப்போம். இதுதான் பொதுவாக அனைவரும் செய்யும் ஒரு விஷயம். ஆனால் இதற்கு மாறாக ஒருசில வீடுகளில் தனித்தனியாக காய்கறிகளை பிரித்து வைப்பார்கள்

ஆனால் ஒரு விஷயம் இப்போது நாம் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். குறிப்பாக வெங்காயமும் உருளைக்கிழங்கும் ஒன்றாக சேர்த்து வைக்கவே கூடாதாம். அந்த வகையில் வாழைப்பழம் எடுத்துக் கொண்டால் எப்போதும் தனியாக தான் வைக்கவேண்டும். காரணம் வாழைப்பழத்தில் இருந்து எத்திலின் என்ற வாயு வெளியாகிறது. இது அருகில் உள்ள மற்ற உணவுப் பொருட்களையும் பாதிக்க செய்துவிடும்.

இதே போன்று திராட்சை பழங்களை பிளாஸ்டிக் பாத்திரத்திலோ அல்லது பிளாஸ்டிக் கவர்களில் கண்டிப்பாக வைக்கவே கூடாது. காரணம் இவ்வாறு செய்தால் அது வேதி தன்மை அடைந்து பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இதற்கு மாறாக துணிப் பையில் வைக்கலாம். ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு பழத்தை ஒன்றாக சேர்த்து வைக்கவே கூடாது. இவை இரண்டும் எதிர் எதிர் வினைகளை புரியக்கூடியது. அதேப்போன்று இதனை சமையலறையிலும் வைக்கவே கூடாது. பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அப்படியானால் ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு தனித்தனி இடங்களில் தள்ளிவைப்பது மிகவும் நல்லது.

வெள்ளரிக்காய் அதிக அளவில் எத்திலீன் வாயுவை உற்பத்தி செய்வதால் அருகில் உள்ள உணவு பொருட்களை பாதிக்கச் செய்து விடும். எனவே இதனையும் தனியாக வைக்க வேண்டும் ஆப்பிள் பக்கத்தில் பூசணி போன்றவற்றை வைக்கக் கூடாது. ஆப்பிள் தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப மிக விரைவில் கெட்டு போய் அருகிலுள்ள மற்றவற்றையும் பாதிக்கச் செய்துவிடும்.

இதேபோன்று வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு இவை இரண்டும் மண்ணுக்கடியில் வளரக்கூடிய கூடியவை. இவை இரண்டும் ஒரே சூழ்நிலையில் மண்ணுக்கு அடியில் வளர்வதால் அதனுடைய தன்மையை மிக விரைவாக இழந்து விடும்.எனவே வெங்காயத்துடன் பூண்டு சேர்த்து வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். இது தவிர வேர  தாவரங்களான கேரட் கருணைக்கிழங்கு போன்றவற்றை இருட்டு அதிகமாக இருக்கும் இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் அப்படியே இருக்கும்.

இதேபோன்று ஃபிரிட்ஜில் வைக்க கூடாத ஓர் உணவுப் பொருள் என்றால் அது தக்காளி எனக்கூறலாம். தக்காளியை பிரிட்ஜில் வைத்தால் அதனுடைய தன்மையை இழந்து சமைக்கும் போது அதனுடைய சுவையும் மாறி விடுகிறது. தக்ககாலியால் கிடைக்கக்கூடிய நன்மைகளும் நமக்கு கிடைக்காமல் போகிறது.