ஆண்களே ..!  மருத்துவரிடம் இதை மட்டும் மறைத்துவிடாதீர்கள்..! 

மருத்துவரிடம் ஆண்கள் மறைக்கக்கூடாத சில முக்கிய விஷயங்களை பற்றி இப்போது பார்க்கலாம். எந்த உடல் தொடர்பான பிரச்சினை என்றாலும் மருத்துவரை அணுகி அதற்கான உரிய சிகிச்சை எடுத்துக் கொள்வதுதான் வழக்கம். அதற்கு நம்மை பற்றி அனைத்து தகவலும் மருத்துவர் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் பாதிக்கப்பட்ட நபர் மருத்துவரிடம் சில உண்மைகளை சொல்ல தயங்கி அப்படியே மறைத்து விடுவார்கள். அவ்வாறு மறைக்கும் போது நமக்கு தேவையான சிகிச்சை பெற முடியாமல் போகும் அப்படி எந்தெந்த விஷயங்களை கண்டிப்பாக மருத்துவரிடம் சொல்லியே ஆக வேண்டும் என்பதை பார்க்கலாம்.

மன அழுத்தம்

ஒரு சிலர் அதிக மன அழுத்தத்துடன் காணப்படுவார்கள். ஆனால் வெளியில் சிரித்தவாறு இருப்பார்கள். மேலும் மருத்துவரிடம் சென்றாலும் கூட அங்கேயும் வாய்திறந்து தான் மனதளவில் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரியபடுத்த மாட்டார்கள். இது முற்றிலும் தவறு இதை கருத்தில் கொண்டு, மருத்துவரிடம் சகஜமாக பேசி உங்களுடைய பிரச்சினையை எடுத்துக் கூறவேண்டும்.

ஒவ்வொரு ஆண்களுக்கும் ஒவ்வொரு பழக்கம் இருக்கும். அப்படி பார்க்கும் போது,பொதுவாகவே ஆண்கள் குடிப்பழக்கம் கொண்டிருப்பவர். இதனை மருத்துவரிடம் செல்லும்போது, நான் எப்போதாவது தான் குடிப்பேன் என்று பொய் சொல்வார்கள், ஆனால் உண்மையில் அவர்கள் அடிக்கடி குடிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள், இதனை மருத்துவரிடம் தெரியப்படுத்தவில்லை என்றால் நம் உடல் உறுப்புகளின் பாதிப்பு குறித்து உண்மை நிலவரத்தை அறிந்து கொள்வது கடினமாக மாறிவிடும்

உறக்கம்

ஒருவர் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 6 மணி நேரமாவது நல்ல உறக்கம் கொள்ள வேண்டும். இவ்வாறு உறக்கம் கொள்ளாமல் 4 மணி நேரமோ அல்லது மூன்று மணி நேரம் மட்டும் உறங்கி விட்டு மீதமுள்ள நேரத்தில் ஏதாவது ஒன்றை நினைத்துக் கொண்டிருந்தால் அவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாகி உறக்கம் முற்றிலும் கெட்டுவிடும். இது போன்று பாதிக்கப்பட்டவர்கள் கண்டிப்பாக மருத்துவரிடம் உண்மையைக் கூறவேண்டும்

தாம்பத்திய வாழ்க்கையில் திடீரென உங்களுக்கு நாட்டம் இல்லாமல் போவது அல்லது உடலளவில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்படுவது இதை கூர்ந்து கவனித்து மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்

உடலில் ஏற்படும் வலி அல்லது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.. இதுபோன்ற விஷயங்களை கண்டிப்பாக மருத்துவரின் தெரியப்படுத்தவேண்டும். இதேபோன்று புதியதாக உடற்பயிற்சியை செய்து கொண்டிருக்கும் நபர்கள் ஏதாவது வித்தியாசத்தை உணர்ந்தால் உணர்ந்தால், மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை எடுத்துக் கொண்டிருந்தாலோ அதன் மூலம் சில பக்க விளைவுகள் ஏற்பட்டு இருக்கலாம். எனவே இதனையும் மறக்காமல் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு மருத்துவர் உங்களுக்கு உண்டான பிரச்சினையை மிக எளிதாக அடையாளம் கண்டு அதற்கான உரிய சிகிச்சை அளிப்பார்.நாமும் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.