ஊட்டி கொடைக்கானல் இப்ப போகாதீங்க..!  

சுட்டெரிக்கும் கோடை வெயிலில் இருந்து தப்பித்துக்கொள்ள குளுகுளு இடத்திற்கு சென்று, இரண்டு நாட்களாவது அங்கு தங்க வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். அதன்படியே, தமிழகத்தைப் பொறுத்தவரையில் பொதுவாகவே கோடை விடுமுறையில் கொடைக்கானல் மற்றும் ஊட்டி போன்ற இடத்திற்கு செல்ல விரும்புகின்றனர். 

இதற்காக கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தங்களுடைய குழந்தைகளை அழைத்துக் கொண்டு குடும்பம் குடும்பமாக ஊட்டி கொடைக்கானல் பகுதிக்கு வருகை புரிகின்றனர். 

ஆனால் இந்த தருணத்தில் ஊட்டி கொடைக்கானல் போன்ற இடங்களில் அதிக சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வருகை புரிவதால், எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.

போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை விட மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், தங்குவதற்கு தேவையான காட்டேஜ் கிடைப்பதே பெரிய விஷயமாக உள்ளது. எனவே கட்டண தொகையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

எனவே இதுபோன்ற தருணத்தில் கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்வது தவிர்ப்பதே நல்லது. இதற்கு மாறாக ஜூன் மாத இறுதி அல்லது ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் நவம்பர் மாதங்களில் சென்றால், மக்கள் கூட்டம் குறைவாக இருக்கும்.தங்குவதற்கு ஏதுவாக குறைந்த கட்டணத்தில் இடங்களும் கிடைக்கும் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.