dont forget to get blessing from god on monday pirathosham

பல ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் பிரதோஷம் (29-1-2018, தை 16) அன்று வருகிறது.

மறவாமல் அன்றைய தினம் நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

சிவ ரகசியம் என்னும் நூலில் (சமஸ்கிருதத்தில் இருந்து ஒரு பகுதி தமிழாக்கம் செய்யப்பட்டது)

சிவலிங்க பூசை எனும் தலைப்பில், பழங்காலத்தில் திங்கட்கிழமை திரயோதசி திதி மற்றும் திருவாதிரை நட்சத்திரம் கூடிய நாளில், "ஸ்ரீசைலம் என்ற தளத்தில்" வாழ்ந்து கொடிய பாவங்களை செய்து வந்த வறிய அந்தணன் பல செல்வங்களை, மாளிகை, பசுக்கள், குதிரைகள் மற்றும் பல வாழ்விற்கு தேவையானவற்றையும் பெற்றான், பெற்றான். அதாவது அன்றைய தினத்தில் பெற்றான். 

பாவங்களை செய்து வந்த அந்தணன் கூட,இறை அருள் பெற்ற நிகழ்வு என்பதால், அன்றைய தினத்தில், வரும் 29 ஆம் தேதி ( திங்கட்கிழமை) பிரதோஷம் மறவாமல்,நாம் எங்கிருந்தாலும் கடவுளை வழிபடலாம்.

அத்தகைய நாள் பல ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வரும் (திங்கட்கிழமை, திரயோதசி திதி, திருவாதிரை நட்சத்திரம் கூடிய நாள்) வரும் 29-1-2018 தை மாதம் 16 ம் நாள் வருகிறது.

அன்றைய தினம் நாம் அனைவரும் வீட்டில் இருந்தாலும் அலுவலக்தில் இருந்தாலும் அருகில் உள்ள சிவாலயம் சென்று பிரதோஷ விழாவில் இறைவனை வழிபட்டு வாழ்விற்கு தேவையான நலங்கள் பெற்று வாழலாம்...