Asianet News TamilAsianet News Tamil

இதை மறக்காமல் செய்யுங்கள்..! அதுவும் இந்த நாளில்..!

நம் வீட்டில் கடவுளை வழிப்படும் போது ஏற்றும் விளக்கு எந்த நாட்களில் அதனை சுத்தம் செய்ய வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.
 

dont forget to do this on this special day
Author
Chennai, First Published Jul 5, 2019, 7:38 PM IST

இதை மறக்காமல் செய்யுங்கள்..! அதுவும் இந்த நாளில்..! 

நம் வீட்டில் கடவுளை வழிப்படும் போது ஏற்றும் விளக்கு எந்த நாட்களில் அதனை சுத்தம் செய்ய வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

குத்துவிளக்கு

தெய்வீகமான குத்துவிளக்கின் அடிப்பாகத்தில் ஸ்ரீ பிரம்மாவும், அதன் நடுப்பகுதியான தண்டு பாகத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணுவும், விளக்கின் மேல் பாகத்தில் ஸ்ரீ சிவபெருமானும் உறைவதாகச் நம்பிக்கை.

குத்துவிளக்கில் அலைமகள், மலைமகள், கலைமகள் ஆகிய முப்பெரும் தேவியரும் இன்னும் சில சக்திகளும் குடிகொண்டு உள்ளார்கள் என்று போற்றப்படுவதால், குத்துவிளக்கு, கடவுளின் அம்சமாகவே கருதப்படுகிறது.

விளக்கை எப்போது சுத்தம் செய்ய வேண்டும் தெரியுமா..?

திங்கட்கிழமை நடுராத்திரி முதல் புதன்கிழமை நடுராத்திரி வரை குபேர தன தாட்சாயணி மற்றும் குககுரு தன தாட்சாயணியும் குடி கொண்டிருப்பதால், இந்த நாட்களில் குத்துவிளக்கினைத் தேய்ப்பதால், இந்த சக்திகள் விலகி விடும். வெள்ளி அன்று தேய்த்தால் குபேர தன தாட்சாயணி விலகி விடும்.

dont forget to do this on this special day

ஆகையால் ஞாயிறு, வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில்தான் விளக்கினை சுத்தம் செய்ய வேண்டும். ஞாயிறு அன்று சுத்தம் செய்து விளக்கினை ஏற்றினால், கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும்.

வியாழக்கிழமை அன்று சுத்தம் செய்து விளக்கினை ஏற்றினால், குரு கடாட்சம் கிட்டும். சனிக்கிழமை அன்று சுத்தம் செய்து விளக்கினை ஏற்றினால், வாகன விபத்துக்களில் இருந்து விடுபடலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios