இன்று அமாவாசை..! வாய்ப்பு இருப்பவர்கள் இன்று இதை செய்ய மறக்காதீங்க...! 

தமிழர்களின் பாரம்பரியம், பழக்கவழக்கம் அனைத்தும் மிகவும் சிறப்பானது. அதிலும் நம் முன்னோர்கள் சொன்ன எந்த ஒரு விஷயத்திற்கு பிறகும் ஒரு அறிவியல் உண்மை இருக்கும் என்பதை யாராலும் மறுக்க  முடியாது. 

அந்த வகையில் அமாவாசையன்று செய்ய வேண்டிய சில விஷயங்களை பார்ப்போம்   

அமாவாசையன்று நம்முடைய முன்னோர்கள் மிகுந்த பசியுடனும் தாகத்துடனும் வீட்டின் வாசற்படியில் வந்து எள் கலந்த நீருக்காக காத்து கொண்டிருப்பார்கள் என்பதும், அதனால் நாம் அமாவாசை இரவில் ஒரு பாத்திரத்தில் நீரும் கருப்பு எள்ளும் கலந்து சிறிது ஊறிய பின்பு வீட்டின் வெளி வாசற்படியிலும் வீட்டின் முன்புறமாக உள்ள செடி கொடிகளின் மீதும் எள் கலந்த நீரை கைகளால் தெளிக்க வேண்டும். இவ்வாறு தெளித்த பின்பு அந்த வாசற்படி வழியாக வீட்டை விட்டு யாரும் வெளியே செல்லக்கூடாது,வெளியிலிருந்து யாரும் நம் வீட்டிற்கும் வரக்கூடாது.. இதை வீட்டின் ஆண் வாரிசு செய்யலாம் இல்லையேனில் பெண்களும் செய்யலாம் தவறில்லை.

பயன்கள் 

அமாவாசை தோறும் இவ்வாறு செய்வதால் முன்னோர்களின் வயிறும் மனதும் நிரம்பி நம்மை வாழ்த்துவர். இவர்களின் வாழ்த்துகள் தான் நமக்கு கோடி புண்ணியத்தையும் செல்வத்தையும் கொடுக்கும் வல்லமை உடையது என்பது ஐதீகம் 

வேறு என்ன செய்யலாம்?

அமாவாசையன்று கடலில் குளிப்பது மிகவும் சிறப்பான பலனை தரும். காரணம் சுரிய- சந்திரனின் உந்துதலால் கடலின் ஆழ்பகுதியில் இருக்கும் சங்கு, பவளம், கடல்வாழ் உயிரினங்களின் ஜீவசக்திகள் கடலின் மேற்பகுதிக்கு வருகின்றன. இதனால் கடல் நீருக்கு ஒரு அதித சக்தி ஏற்படுவதால் அந்த நீரில் நாம் குளிப்பதால் நம்முடைய தோஷங்கள் விலகும், உடலும் மனமும் பலம் பெறும் என்பது ஐதீகம் 

அமாவாசையன்று பசுவுக்கு ஒரு கட்டு அகத்திக்கீரை மற்றும் 7 வாழைப்பழங்கள் நம் கைகளால் கொடுக்க நம்முடைய தோஷங்கள் பாவங்கள் நீங்கி செல்வங்கள் பெருகுவதுடன் முன்னோர்களின் ஆசியும் பரிபூரணமாக கிட்டும். கோயிலில் உள்ள பசுவுக்கு கொடுக்க இரட்டிப்பு பலன் கிட்டும் என்பது ஐதீகம்