கடவுள் பக்தி கொண்டவர்கள் வாரத்தில் குறிப்பிட்ட சில நாட்கள் மட்டும்  கோவிலுக்கு  சென்று வழிபடுவார்கள். அவ்வாறு கோவிலுக்கு செல்லும் போது சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும் என நம் முன்னோர்கள் தெரிவித்து உள்ளனர். 

கடவுள் பக்தி கொண்டவர்கள் வாரத்தில் குறிப்பிட்ட சில நாட்கள் மட்டும் கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள். அவ்வாறு கோவிலுக்கு செல்லும் போது சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும் என நம் முன்னோர்கள் தெரிவித்து உள்ளனர். அதன் படி, 

கோவிலுக்கு செல்வதற்கு 24 மணி நேரம் முன்பும் பின்பும் அசைவ உணவு, மது இவற்றை தவிர்ப்பது நல்லது, மற்ற விஷயங்களிலும் கட்டுப்பாடு கட்டாயம் தேவை. போகும்போதோ வரும்போதோ யாருக்கும் பிச்சை போட கூடாது. பெண்கள் வீட்டுக்கு விலக்காகி 7 நாட்கள் கழித்துச் ஆலயத்திற்குள் செல்வது நல்லது. யாரிடமும் கடன் வாங்கி செல்ல வேண்டாம் அப்படிப்பட்ட சூழ்நிலையில் பூஜைக்கென்று சொல்லி வாங்காதீர்.

போகும்போதோ வரும்போதோ குல தெய்வத்தை வழிபடலாம். சுவாமி தரிசனம் சிலமணி நேரம் ஆகும் என்பதால் புறப்படுவதற்கு முன்பு டீ பிஸ்கட் காபி கூல்ட்ரிங்ஸ் போன்ற லைட் ஃபுட் சாப்பிடலாம். பரிகாரங்கள் செய்வதாக இருந்தால் அனைத்தையும் தாங்களே முன்னின்று செய்ய வேண்டும். ஆலயம் வர இயலாதவர்கள், வெளி நாடு வாசிகள், விரும்பாதவர்கள் இவர்களுக்கு அவர்களது இரத்த உறவுக்காரர்கள் விசுவாசமுள்ளவர்கள் குருமார்கள் பூஜை செய்தால் பலிதமாகும்.

பூஜைக்காக தாங்கள் நேரம் பணம் செலவழிப்பது பெரிய விஷயமல்ல கணிந்த தாழ்ந்த முறையான பக்தி மனோபாவமே பலனை நிர்ணயம் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.முக்கிய பூஜை சம்பந்தப்பட்ட விஷயங்களை பிறரிடம் சொல்லாமல் இருப்பது நல்லது. பொருட்கள் தரமாக இருந்தால் அனைத்தையும் பரிகார ஸ்தலத்தில் வாங்குவது சிறந்தது. மாலை நேர பூஜைக்கு காலை அணிந்த உடையையே அணிந்து செல்ல கூடாது. வசதியுள்ளவர்கள் புத்தாடை அணிந்து செல்லலாம்....

கோவிலுக்கு செல்லும் போது இது போன்ற சில விஷயங்களை கடை பிடிப்பது நல்லது