ஆபாச வீடியோ பார்த்தவர்கள் ஓவரா பயப்பட வேண்டாம்..! ஆனால் இப்படி செய்வதால் அடுத்தது "கைது" தான் ..! 

சமூக வலைத்தளத்தில் ஆபாச வீடியோக்களை பார்த்தவர்கள் பயப்பட வேண்டாம் என ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார். 

ஆனால் குழந்தைகள் மற்றும் பெண்கள் தொடர்பான பாலியல் வீடியோக்கள் பதிவேற்றம் செய்தாலோ தரவிறக்கம் செய்வதும் அதனை மற்றவர்களுக்கு பரப்புவதும் சமூகவலைதளங்களில் பகிர்வதும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் அவ்வாறு செய்பவர்கள் உடனடியாக பிடிபட்டு கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில் இவர்கள் அப்லோட் செய்வதன் காரணமாக சமூகவலைதளத்தில் ஆபாச படங்களை பார்த்தவர்கள் பயப்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் தற்போது திருச்சியில் பல்வேறு போலி கணக்குகள் மூலம் ஆபாச படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து வந்ததாக வெளியே வந்த தகவலின் அடிப்படையில், போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.

இதனையடுத்து தனிப்படை போலீசாரின் தீவிர நடவடிக்கையால் திருச்சியை சேர்ந்த ஏசி மெக்கானிக் கிறிஸ்டோபர் அல்போன்ஸ் ராஜ் என்பவர் தற்போது அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நிலவன் ஆதவன் என்ற பெயரில் போலி கணக்கு வைத்திருந்து பேஸ்புக் மூலம் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் வந்துள்ளார். இதுவரை மூன்று கணக்குகள் மூலம் கணக்குகள் மூலம் குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.