Asianet News TamilAsianet News Tamil

தற்கொலை செய்ய தூண்டுகிறதா ஸ்மார்ட்போன்!? அலறவைக்கும் அதிர்ச்சி ரிப்போர்ட்...

Does smartphone trigger suicide?
Does smartphone trigger suicide?
Author
First Published Dec 3, 2017, 4:53 PM IST


உலக அளவில் ஸ்மார்ட்போன் பயன்பாடுகள் அதிகரித்து வருகிறது. அதேபோல், இணையதளங்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்து வருகிறது.

ஸ்மார்ட்போன்களை 13 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களே அதிகம் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த சதவீதம் ஒவ்வொரு வருடமும் கூடிக்கொண்டே போகிறது. அதேபோல், இணையதளத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்காவின் புளோரிடா மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். ஸ்மார்ட்போன் மற்றும் இணையதளங்கள் பயன்படுத்தும்போது ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. அப்போது அதிர்ச்சிகரமான தகவலை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

மன அழுத்தம், தற்கொலை எண்ணத்தை தூண்டுவது போன்றவை இளைஞர்களை வெகுவாக பாதித்து வருவதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஆய்வில் கூறப்பட்ட மனநல பிரச்சனைகள் அனைத்தும் தீவிரமானவை.

ஒரு நாளைக்கு 5 மணி நேரம் அல்லது அதற்கு மேல் மின்னணு சாதனங்களில் நேரத்தை செலவிடும் 48 சதவீத இளைஞர்களிடம் தற்கொலை தொடர்பான நடத்தை காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. 28 சதவீத இளைஞர்கள், ஒரு மணி நேரம் மட்டுமே மின்னணு சாதனங்களை பயன்படுத்தினர். அவர்களிடம் அதுபோன்ற நடத்தை காணப்படவில்லை.

Does smartphone trigger suicide? 

மின்னணு சாதனங்கள் அதிகமாக பயன்படுத்தும் இளைஞர்கள் மகிழ்ச்சியற்று இருப்பார்கள். உடற்பயிற்சி, நண்பர்களுடன் பேசுதல், ஆலயம் செல்லுதல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் மகிழ்ச்சியாக காணப்படுகின்றன.

2010 ஆம் ஆண்டில் இருந்து 13 முதல் 18 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடம் மன அழுத்தம் மற்றும் தற்கொலையைத் தூண்டுவது அதிகரித்துள்ளது- 2010 முதல் 2015 முதல் 31 சதவீத இளைஞர்களிடையே தற்கொலை எண்ணத்தை அதிகரித்துள்ளது.

Does smartphone trigger suicide?

ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களில் அதிகளவில் பாதிக்கப்படுபவர் பெண்கள்தான் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. 65 சதவீதம் பேர் தற்கொலையாலும், 58 சதவீதம் பேர் மன அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios