Asianet News TamilAsianet News Tamil

பிறந்த பச்சிளம் குழந்தைக்கு 'மூச்சுத்திணறல்'! குழந்தையோடு பைக்கில் பரந்த டாக்டர் நர்ஸ்! திக் திக் நிமிட காட்சி

கடந்த செவ்வாய்க் கிழமையான்று, வாஜே நர்சிங் ஹோமில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் எடை 2.9 கிலோ இருந்துள்ளது. பிறந்த சிறிது நேரத்திலேயே குழந்தைக்கு மூச்சுத் திணறல் மற்றும் சையனோசிஸ் இருந்துள்ளது. 
doctors and nurse saved a newborn baby in icu
Author
Maharashtra, First Published Apr 14, 2020, 1:41 PM IST
பிறந்த பச்சிளம் குழந்தைக்கு 'மூச்சுத்திணறல்'! குழந்தையோடு பைக்கில் பரந்த டாக்டர் நர்ஸ்! திக் திக் நிமிட காட்சி! 

மும்பையில் அலிபாக் என்ற பகுதியில் உள்ள வாஜே நர்சிங் ஹோமில் பிறந்த குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்ற மருத்துவரே இருசக்கர வாகனத்தை  எடுத்துக்கொண்டு சென்று குழந்தையின் உயிரை காப்பாற்றிய சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. 

கடந்த செவ்வாய்க் கிழமையான்று, வாஜே நர்சிங் ஹோமில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் எடை 2.9 கிலோ இருந்துள்ளது. பிறந்த சிறிது நேரத்திலேயே குழந்தைக்கு மூச்சுத் திணறல் மற்றும் சையனோசிஸ் இருந்துள்ளது. குழந்தையை உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் உடனடியாக சற்று தூரத்தில் உள்ள மற்றொரு ஆனந்தி மருத்துவமனைக்கு   போன் செய்து, குழந்தையின் உடல் நிலை குறித்து தெரிவித்து உதவி கேட்டு உள்ளார்.
doctors and nurse saved a newborn baby in icu

பின்னர் அடுத்த நொடியே ஆனந்தி மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ராஜேந்திர சந்தோர்கர், வாஜே மருத்துவமனைக்கு வந்துள்ளார். பின்னர் குழந்தையை பரிசோதனை செய்துவிட்டு, உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றலாம் என தெரிவித்து உள்ளார். ஆனால் அருகில் எந்த ஒரு ஆம்புலன்சும் கிடைக்க வில்லை என்பதால் எப்படி செல்வது என பரிதவித்து வந்துள்ளனர்

இந்த ஒரு நிலையில் பொதுச்சுகாதார நிலையத்தில் நர்சாகப் பணியாற்றி வந்த குழந்தையின் அத்தை சம்பவ இடத்திற்கு ஓடோடி வந்து தன்னையும் குழந்தையையும் இருசக்கர வாகனத்திலேயே அந்த மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி கேட்டு உள்ளார்.
doctors and nurse saved a newborn baby in icu

பின்னர் மருத்துவர், நர்ஸ் குழந்தையை அழைத்து கொண்டு வேகமாக மருத்துவமனைக்கு சென்று உள்ளனர். அங்கு உடனடியாக  குழந்தைக்கு சுவாசகருவி பொருத்தப்பட்டு மற்ற சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தற்போது நலமாக உள்ளது குழந்தை. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தினாலும், அனைவரையும் நெகிழ வைத்துள்ளது

கொரோனாவின் பிடியில் இருந்து தப்பித்துக்கொள்வதே பெரும் சிரமமாக உள்ள நிலையில் இது போன்ற இன்னல்களும் அவ்வப்போது சந்திக்க நேரிடுகிறது.  
 
Follow Us:
Download App:
  • android
  • ios