do you remember december flower

டிசம்பர் பூ....! ஞாபகம் இருக்கிறதா..?

டிசம்பர் மாத குளிர்....காலை மாலை இரண்டு வேளையும் கண்ணுக்கு குளிர்ச்சியாகவும்,மனதிற்கு இதத்தையும் தரும் அழகிய பூ டிசம்பர் பூ...

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் பூக்கும் இந்த பூவிற்கு டிசம்பர் பூ என்றே பெயரிடப்பட்டது.

வாசம் இல்லையென்றாலும்,லேவண்டர்,பிங்க்,மஞ்சள் கலந்த ஆரஞ்சு என பல வண்ணங்களில் மலரக்கூடியது தான் இந்த டிசம்பர் பூ...

கிராமங்களில் மட்டுமே மிக எளிதில் பார்க்க முடியும்.ஆனாலும் தற்போதைய சூழலில் இந்த பூச்செடியையும் கூட அப்புறப்படுத்துகின்றனர்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், டிசம்பர் பூ எத்தகைய மருத்துவ குணம் படைத்தது தெரியுமா?

நகச்சுற்று

நகத்தில் உள்ள கிருமிகளால் ஏற்படும் நகச்சுற்று,மிகுந்த வலியை கொடுக்கும். இதனை கட்டுபடுத்த மருந்து மாத்திரையை விட,டிசம்பர் பூ இலைகளை கொண்டு,நன்கு அரைத்து,நகச்சுற்று மேல் தடவி வர,வலியும் பறந்து விடும், நகச்சுற்றும் சரியாகி விடும்.