do you like to get marry just try

கல்யாண ஆசை இருக்கா? இதை முயற்சி பண்ணி பாருங்க....

திருமணம் என்றாலே நம்ம கலாச்சாரப்படி சில வரைமுறைகள் உண்டு.அதை எல்லாம் மனதில் ஏற்றுக்கொண்டு,ஒரு குறிப்பிட்ட வயது வரும் போது நம் முன்னோர்களே பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பார்கள் அல்லவா..?

ஆனால் வெளிநாடுகளில் அவ்வாறு கிடையாது ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின்,தனித்து வாழ தொடங்கி விடுகிறார்கள்...வாழ்கையை சில ஆண்டுகள் ஜாலியாக அனுபவித்து வருகிறார்கள்.பின்னர் திருமணம் செய்ய முடிவு செய்கிறார்கள்...

இதே போன்று ஜப்பானில் பெண்களை பொறுத்தவரை திருமணம் செய்துகொள்ள சரியான வயதாக கருதப்படுவது 28

இந்த வயதை கடக்காமல், சரியான வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதை நினைவு கூறும் விதமாகவும், தான் திருமணம் செய்ய தயாராக உள்ளேன் என்பதையும் விளக்கும் விதமாக புது வகையான Husband Hunting Bra என்ற பிரா ஜப்பானில் அறிமுகம் செய்யப் பட்டு உள்ளது

இதில் இரு டிஜிட்டல் ஸ்க்ரீன் இருக்கும். ஒரு மோதிரம் இருக்கும். அந்த மோதிரத்தை எடுத்து இன்செர்ட் செய்தால் அந்த டிஜிட்டல் ஸ்க்ரீனில் கவுன்ட்டவுன் துவங்க ஆரம்பித்துவிடும். மேலும், இந்த பிராவில் ஒரு பேனா இருக்கும். அதில் திருமணத்திற்கான காண்ட்ராக்ட் சைன் செய்ய வேண்டும்.

அதாவது திருமணம் செய்துகொள்ள இந்த பிரா ஒன்று தூண்டுகோலாக அமைக்கப் பட்டு உள்ளது என்றே கூறலாம்....