Asianet News TamilAsianet News Tamil

ரயில் நிலையங்களில் உள்ள இந்த அடையாள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?

ரயில் ஆபரேட்டர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்களுக்காக இந்திய ரயில்வேயால் வெவ்வேறு குறியீடுகள் உருவாக்கப்பட்டுள்ளன

Do you know what these symbols on sign boards at railway stations mean? Rya
Author
First Published Sep 23, 2023, 9:13 AM IST

ஆசியாவின் மிகப்பெரிய பொதுத்துறை போக்குவரத்து முறையாக இந்திய ரயில்வே உள்ளது. ஒரு நாளில் கோடிக்கணக்கானோர் ரயில்களில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். டிக்கெட் விலை குறைவு, வசதியான பயணம் உள்ளிட்ட பல காரணங்களால் ரயில் பயணங்களையே பலரும் தேர்வு செய்கின்றனர். அந்த வகையில் நாம் அனைவருமே ஒருமுறையாவது ரயிலில் பயனம் செய்திருப்போம்.. ஆனால் ரயில்வே தொடர்பான பல தகவல்கள் இன்னும் நம்மில் பலருக்கும் தெரியாது. ஆம்.. ரயில் ஆபரேட்டர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்களுக்காக இந்திய ரயில்வேயால் வெவ்வேறு குறியீடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இன்று, ரயில் தண்டவாளங்களில் குறிப்பிடப்பட்டுள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம் என்று பார்க்கலாம்.

ரயில்வேயில் பல பணிகள் சிக்னல்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. அதனால் பல இடங்களில் அடையாள பலகைகள் நிறுவப்பட்டுள்ளன. அந்த வகையில் ரயில் தண்டவாளங்களில் W/L மற்றும் C/FA போன்ற குறியீட்டுடன் மஞ்சள் நிற பலகைகள் இருப்பதை நாம் பார்த்திருப்போம். இவை ரயில்வே கிராசிங் பகுதிகளில் ஒலி எழுப்ப வேண்டும் என்பதை குறிக்கும். அதாவது W/L என்றால் Whistle for Level crossing என்று அர்த்தமாகும். C/FA என்பது இதே அர்த்தத்தை குறிக்ககூடிய ஹிந்தி எழுத்துக்களின் சுருக்கமாகும்.

ஒரு நாள் தங்கவே ரூ.4 லட்சம்.! இந்தியாவில் உள்ள மிகவும் விலையுயர்ந்த ராயல் ஹோட்டல்கள் இவை தான்..

மேலும் ரயில் ஓட்டுநருக்கு முன்னால் ஆளில்லா கேட் வருவதாக இந்த பலகை தெரிவிக்கிறது, எனவே அவர் ரயில் விசில் அடித்து கேட்டை கடக்க வேண்டும். பொதுவாக, W/L அல்லது C/FA எழுதப்பட்ட பலகை ஆளில்லா வாயிலுக்கு 250 மீட்டர் முன்பு நிறுவப்படும். இதேபோல், W/B போர்டு ரயில் ஓட்டுநருக்கு முன்னால் ஒரு பாலம் வருவதாகத் தெரிவிக்கிறது, எனவே அவர் பாலத்தைக் கடக்கும்போது விசில் அடிக்க வேண்டும். W/B போர்டு என்பது Whistle Bridge என்பதை குறிக்கிறது. ஒரு பாலம் முன்னால் இருப்பதாக ஓட்டுநரிடம் பலகை குறிப்பிடுகிறது. இந்தப் பலகையைப் பார்த்ததும் ரயில் ஓட்டுநர் ஒலி எழுப்ப வேண்டும்..

T/P அல்லது T/G போர்டு என்பது ரயில்களுக்கான வேகத்தை குறிப்பதாகும். ரயில் பாதையின் ஓரத்தில் T/P அல்லது T/G என்ற எழுத்துகள் கொண்ட பலகை இருந்தால் ரயிலின் ஓட்டுநர் ரயிலின் வேகத்தைக் குறைக்க வேண்டும் என்று அர்த்தம். இவை தவிர, ரயில் நிலையங்களில் துதிக்கையில் பச்சை விளக்கு ஏந்திய யானை சின்னத்தை நீங்கள் பார்த்திருக்கலாம்.  ஆனால் அது என்னவென்று வெகு சிலருக்கே தெரியும். இது இந்திய ரயில்வேயின் சின்னமாக கருதப்படுகிறது. இது இந்திய ரயில்வேயின் 150வது ஆண்டு விழாவில் வெளியிடப்பட்டது. 2003 இல், இந்திய இரயில்வே தனது சின்னமாகத் தேர்ந்தெடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios