இசையமைப்பாளர் கணேஷ்இவ்வளவு நகை அணிய காரணமான "அந்த ஒரு வார்த்தை"...!

சினிமா உலகில் மிக பிரபலமான இசையமைப்பாளரான ஷங்கர் கணேஷ் பற்றி அனைவரும் தெரிந்த ஒன்றே. இவர்களுக்கு முன்னதாக எப்படி விஸ்வநாதன்-ராமமூர்த்தி என்ற இரட்டை இசையமைப்பாளர்கள் மக்கள் மத்தியில் பிரபலமானார்களோ, அதே போன்று சங்கர் கணேஷ் இரட்டையர்களை கண்டிப்பாக அனைவருக்கும் தெரியும்.

ஆனால் இசையமைப்பாளர் கணேஷ் கழுத்தில் எப்போதும் தங்க நகையை அணிந்து கொண்டே இருப்பது பற்றி பலரும் சிந்தித்தாலும், அது குறித்து கேள்வி எழுப்ப தயங்குவார்கள். அதற்கு காரணம் பல இருக்கின்றது. இந்த ஒரு நிலையில் ஏன் அவர் இந்த அளவுக்கு தங்க நகை அணிந்து இருக்கிறார் என அவருடைய மகன் ஸ்ரீகுமார் ஒரு பேட்டியின் போது தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் கணேஷ் பொறுத்தவரையில் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என பல மொழிகளில் இசை அமைத்தவர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாத்துறையில் காலூன்றி நிற்பவர்.1967 ஆம் ஆண்டு மகராசி படத்தில் இவர் பாடிய பாடல் மூலம் தான் அனைவருக்கும் தெரிய வந்தார். பொதுவாகவே வெளி நிகழ்ச்சிக்கு சென்றாலும் கூட நகை அணிவது வழக்கம். 

அதேபோன்று இசையமைக்க சென்றாலும் அணிந்து கொண்டேதான் செல்வாராம்.இதற்கு மிகப்பெரிய சுவாரசியம் இருக்கிறது என தெரிவித்துள்ளார் அவருடைய மகன் ஸ்ரீகுமார்.

அப்போது, "என்னுடைய அப்பா சினிமாவிற்கு முயற்சி செய்தபோது ஒருவரிடம் நீங்கள் அணிந்திருக்கும் செயின் விலை என்ன? என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் மனம் மிகவும் புண்படும்படி இந்த செயின் தொட்டு பார்க்க கூட உனக்கு தகுதி இல்லை. அப்படி இருக்கும்போது எப்படி உன்னால் வாங்க முடியும்? இதனை வாங்க முடியாது... எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தங்க நகையை வாங்கி உன் கழுத்தில் போட முடியாது. உன் ஒட்டுமொத்த வாழ்க்கையில் தங்க நகையை தொட்டுப்பார்க்க கூட வாய்ப்பு கிடைக்காது" என பேசி துன்புறுத்தியுள்ளார்.

அந்த ஒரு வார்த்தை அவருடைய ஆழ்மனதில் பதிந்து, எப்படியும் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தி உள்ளது. அதன் பின்னர்தான் வாழ்க்கையில் மெல்ல மெல்ல முன்னேறி மக்கள் மத்தியில் நிலைத்து நிற்கிறார். அதன் பிறகு பல்லாயிரகணக்கான பாடல்களுக்கு இசையமைத்து இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் என்றால் யாராலும் மறுக்க முடியாது. அதிலும் குறிப்பாக இசைஞானி இளையராஜாவிற்கு அடுத்தபடியாக சங்கர் கணேஷ் அறியாதவர்கள் யாருமில்லை என்றே கூறலாம். இதுநாள்வரை இவர் ஏன் இப்படி நகை அணிந்து இருக்கிறார் என சிந்தித்துப் பார்த்தவர்களுக்கெல்லாம் இது ஒரு பதிலாக அமையும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது.