நகம் கடிக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள்..? ஆம்... உங்கள் பெற்றோர்களுக்கு ஆகாது தான்..! 

கையில் உள்ள நகத்தை கடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் ஏராளம். என்னதான் படித்து இருந்தாலும் சரி, தன்னையே மீறி சில சமயத்தில் ஒரு சிலர் தன் நகங்களை கடிப்பார்கள். அப்போதெல்லாம் நம் முன்னோர்கள் நகம் கடித்தால் பெற்றோர்களுக்கு ஆகாது என  சொல்வதை கேட்டு இருப்போம் அல்லவா ..? 

அது ஏன்  தெரியுமா..? இந்த பதிவை படியுங்கள்...! 

நகம் கடிக்கும் போது நகத்தில் உள்ள அழுக்கு கிருமிகள் வாயின் வழியாக உடலுக்குள் செல்லும். அதனால் நோய்கள் ஏற்படும். நகத்தில் மிக எளிதாக அழுக்குகள் படியும், அதையும் தாண்டி நாம் தினமும் வேலைக்கு சென்று வருகிறோம்... எத்தனையோ இடங்களுக்கு சென்று வருகிறோம்.. பேருந்தில் கம்பியை பிடிக்கிறோம், வண்டியை இயக்குகிறோம்.. இது போன்று சொல்லிக்கொண்டே போகலாம்.

இவ்வாறு உள்ள போது, நாம் நகம் கடித்தால், நகத்தில் உள்ள அத்தனை அழுக்குகளும் நம் வயிற்றுக்குள் செல்லும். பின்னர் அது பல தீங்குகளை உருவாக்கும்.இது ஒரு பக்கம் இருக்க, "நகம் கடித்தால் ஏன் நம் பெற்றோர்களுக்கு ஆகாது என சொன்னார்கள் தெரியுமா..? 

நகத்தைக் கடிக்கும் போது அது வயிற்றுக்குள் போகும். நமக்கு உடம்பு சரி இல்லாம போச்சுன்னா நம்மோடு சேர்ந்து நம்மை பெத்தவங்களுக்கும் கஷ்டப்பாடுவாங்க தானே..? அதனால தான் நம் பிள்ளைகள் பெற்றோர்கள் மீது வைத்துள்ள அதிக பாசத்திற்கு கட்டுப்படுவார்கள்... சொன்னா கேட்பார்கள் என்பதற்காகத்தான், நகம் கடித்தால் ஏன் நம் பெற்றோர்களுக்கு ஆகாது என கூறி உள்ளனர் முன்னோர்கள்..!