Asianet News TamilAsianet News Tamil

தூங்கும் போது கீழே விழுவது போல் உணர்வு வருகிறதா? காரணம் இதுதான்!!

Feeling of Falling While Sleeping : ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது திடீரென கீழே விழுவது போல் உணர்வு ஏற்பட்டால், அதற்கான காரணம் என்ன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

do you feel like your are falling down while you sleep heres why in tamil mks
Author
First Published Aug 17, 2024, 9:52 AM IST | Last Updated Aug 17, 2024, 9:56 AM IST

நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது, திடீரென நம்மளை அறியாமலேயே ஏதோ ஒரு உயரமான இடத்தில் இருந்து கீழே விழுவது போல் உணர்வோம். பிறகு விழுந்தடித்து கண் விழித்து பார்த்தால் அப்படி எதுவும் நடந்திருக்காது. கண்டிப்பாக இந்த மாதிரியான உணர்வுகளை நாம் அனைவரும் உணர்ந்திருப்போம். அப்படி நீங்களும் உணர்ந்து இருக்கிறீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கானது தான். இந்த மாதிரியான உணர்வு ஏன் ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன என்பதில் பற்றி எப்போதாவது நீங்கள் யோசித்து இருக்கிறீர்களா? இதற்கான பதில் இங்கே உள்ளது. அது குறித்து இப்போது நாம் விரிவாக பார்க்கலாம்.

பொதுவாகவே, இந்த மாதிரியான உணவு ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது நம் மூளைக்கும் கனவுக்கு இடையே நடக்கும் இடையான ஹார்மோன் இணைப்பில் ஏற்படும் தாக்கத்தினால் தான் இப்படி
உருவாகின்றது.

Hypnic Jerk : 

நாம் தூங்கிக் கொண்டிருக்கும் போது உருவாகும் தொல்லைகள் தான் ஹைப்நிக் ஜர்க் என்று அழைக்கப்படுகிறது. இதை ஹைப்பர் ஜக் அல்லது ஸ்லீப்பர் என்றும் கூட சொல்லலாம்.

தூக்கத்தில் நடக்கும் இந்த மாதிரியான உணர்வுக்கு காரணம் இதுதான் என்று இதுவரை யாரும் சொல்லியதில்லை என்று உளவியலாளர் ஒருவர் கூறுகின்றார். நாம் உறக்கத்தில் இருந்து எழும் நிலை மற்றும் கனவு நிலைக்கு இடையே உண்டாகும் கூர்மையான போருக்கு மத்தியில் ஏற்படும் தாக்கம் தான் இதுவாக இருக்கலாம் என்றார் உளவியலாளர்.

நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது நாம் உடலானது பாரளைஸ் நிலைக்கு தானாகவே சென்று விடும். இந்த சமயத்தில் ஆர்.ஈ.எம் எனப்படும் நாம் செல்லும்போதுதான் கனவுகள் நமக்கு தோன்ற ஆரம்பிக்கும். இப்படி நாம் ஆழ்ந்த உறக்க நிலையில் இருக்கும்போது தான் நம் உடல் மூளையைத் தாண்டி செயல்படும் போது நாம் திடீரென விழுவது போன்ற உணர்வு நமக்கு உண்டாகும் அல்லது நம்மை அறியாமலேயே நாம் திடீரென விழிப்பது போன்று நிகழ்வுகள் நடக்கும்.

நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது நம்முடைய தசைகளில் இழுப்பு ஏற்படும். இது ஆங்கிலத்தில் மைக்ரோமேக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. நமக்கு விக்கல் வருவது கூட இந்த வகையை சேர்ந்தது தான் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

நம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது திடீரென விழுவது போல உணர்வு வருவது மிகவும் இயல்பானது என்கின்றனர் ஆய்வாளர்கள். மேலும், இது எந்த ஒரு கொடிய விளைவையும் ஏற்படுத்தாது. 

காரணிகள் : 

அதிகப்படியான காஃபின், நிக்கோடின் எடுத்துக் கொள்பவர்கள், வெறித்தனமாக உடற்பயிற்சி செய்பவர்கள், மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த மாதிரியான உணர்வு அடிக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள். 

அது மட்டும் இன்று பதட்டம் மட்டும் உறக்கமின்மையும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ஒரு நபருக்கு இந்த மாதிரியான உணர்வு அடிக்கடி ஏற்பட்டால், அவருக்கு பதட்டம், மன அழுத்தம் நிறைய இருக்கிறது என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.

தீர்வு :

மன அழுத்தம், அதிகப்படியான வேலை  மற்றும் வேலைப்பளு, நள்ளிரவு வரை வேலை செய்வதை தவிர்க்கவும். இதற்கு தூக்கம் மிகவும் அவசியம்.  எனவே, இந்த மாதிரியான உணர்வுகள் வராமல் இருக்க, நல்ல தூக்கமே இதற்கு அருமருந்தாகும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios