பெண் குழந்தைகளை பெற்றவர்கள் புண்ணியம் செய்தவர்கள் என பெரியவர்கள் சொல்வதை கேட்டிருப்போம். ஆனால் அத்தகைய பெண் குழந்தைகளை எப்படி எல்லாம் பேணி காக்க வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம் .

  1. தான் பெற்றெடுத்த ஆண் குழந்தை போலவே பெண் குழந்தைக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்
  2. பெண் குழந்தையாக இருந்தாலும் , அவளுக்கு கிடைக்க கூடிய அனைத்து சலுகையும் வீட்டிலேயே வழங்க வேண்டும்
  3. பெற்றோரின் ஆசையையும் , கனவுகளையும் தன் மகள் மீது திணிக்க கூடாது
  4. அவளுடைய வாழ்கையை அவளே தேர்ந்தெடுக்கும் உரிமையை கொடுங்கள்
  5. பல கசப்பான சம்பவங்களை சொல்லி, பயமுறுத்துவதை விட, விழிப்புணர்வை ஏற்படுத்துங்க
  6. தைரியமாக இந்த உலகில், சுதந்திரமாக வாழ கற்று கொடுங்கள்
  7. மற்றவரால் உங்கள் பெண் தவறாக பேசப்பட்டாலும், அவள் மீது முழு நம்பிக்கை வையுங்கள். அந்த நம்பிக்கையே அவளை நல்வழிபடுத்தும்
  8. அதிக கட்டுப்பாடுகளை அவர்கள் மீது திணிக்க வேண்டாம்
  9. தினமும் சில குறிப்பிட்ட நேரத்தை உங்கள் பெண் குழந்தைகளிடம் செலவிடுங்கள். சில சமயத்தில் தன் தாயிடம் சொல்ல மறந்த பல விஷியங்கள் கூட தன் தந்தையிடம் கூறுவாள் பெண் பிள்ளை