அதிக வயது பெண்ணை திருணம் செய்யவே கூடாதாம் ஏன் தெரியுமா?

https://static.asianetnews.com/images/authors/e065074c-8e18-5858-afb6-5be406a1a979.jpg
First Published 13, Sep 2018, 4:32 PM IST
Do  know why not gents not married same age girls
Highlights

பொதுவாகவே திருமணத்திற்கு பெண், அல்லது மாப்பிள்ளை பார்க்கும் பெற்றோர்களும், குடும்பத்தினர், பெண் மாப்பிள்ளையை விட இளையவராக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். 
 

பொதுவாகவே திருமணத்திற்கு பெண், அல்லது மாப்பிள்ளை பார்க்கும் பெற்றோர்களும், குடும்பத்தினர், பெண் மாப்பிள்ளையை விட இளையவராக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். 

இதற்கு முக்கிய காரணம் நம் முன்னோர்கள் என்று கூட கூறலாம்.  அவர்கள் பெண், மற்றும் ஆண் இருவரின் திருமண வாழ்கை முறையை நினைவில் வைத்து, அதனை செயல்படுத்தினர். அப்போதெல்லாம் 10 வயது 15 வயது வித்தியாசத்தில் கூட திருமணங்கள் நடந்துள்ளது.

ஆனால், இப்போது பலரும் பெண் மற்றும் ஆணுக்கும் சமமான வயதில் திருமணம் செய்கிறார்கள். ஒரு ஆண்கள் தன்னை விட வயது அதிகமான பெண்களையும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.

இவை அனைத்தும், முன்னோர்கள் வாழ்ந்ததற்கும் , தற்போதைய வாழ்க்கைக்கும் எதிராக இருந்தாலும் அவற்றை தற்போதைய இளைஞர்கள் மூட நம்பிக்கை என்றே பார்க்கிறார்கள்.

உண்மையில் முன்னோர்கள் திருமணத்தின் போது ஆண்களை விட பெண்கள் ஏன் குறைவான வயது உடையவர்களாக இருக்க வேண்டும் என கூறினார்கள் தெரியுமா?

அறிவியல் ரீதியான உண்மைகள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதை பார்ப்போம்!

1. பொதுவாகவே ஆண்களை விட பெண்கள் மன நிலை முதிர்ச்சியானவர்கள். இதனால் சம வயதிலோ அல்லது குறைவான வயதுடைய ஆண்களை அவர்கள் திருமணம் செய்தால் அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டு பிரச்சனை வர வாய்ப்பு உள்ளது. இதனால் குறைவான வயதுடைய பெண்ணை திருமணம் செய்வதே நல்லது. 

2. பெண்களுக்கு சரியாக 45 -50 வயதில் மேனோபாஸ் ஏற்படும். அந்த கால கட்டத்தில் பெண்களுக்கு உடலுறவில் நாட்டம் இருக்காது. ஆனால் ஆண்களுக்கு அப்படி இல்லை 50 வயதில் கூட அவர்களுக்கு உடலுறவில் நாட்டம் இருக்கும். இதனால் சமமான வயதிலோ அல்லது வயது அதிகமான பெண்களை அவர்கள் திருமணம் செய்தால் மன கசப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

3. ஆணுக்கும் - பெண்ணுக்கு கண்டிப்பாக 5 -  8 வயது வரை இடைவெளி வேண்டும் என சொல்லப்படுகிறது. இதனால் ஆண்கள் பெண்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும்.  கேலி கிண்டல் செய்தால் கூட அதனை அவர்கள் பெரிதாக கண்டு கொள்ள மாட்டார்களாம். இதுவே பெரியவர்களாக இருந்தால் அது பிரச்சனையில் போய் முடியவும் வாய்ப்பு உள்ளது.

4. அறிவியல் ரீதியாக ஆண்களுக்கு 35 வயது வரை உடலுறவின் மீது அதிக ஆர்வம் காட்டுபராக இருப்பார்கள். ஆனால் பெண்களுக்கோ அவர்களின் கரு முட்டை 30 வயதை எட்டும் போதே வலிமை குறைத்து விடும். இதனால் ஏற்படும் ஹார்மோன் சுழற்சி காரணமாக சிலருக்கு விரைவாகவே உடல் உறவின் மீது ஆர்வம் குறையும். இதனால் ஆணுக்கு பெண்ணுக்கும் மனஸ்தாபங்கள் ஏற்படும்.

5.அனைத்திலும் மிகவும் முக்கியமானது இது தான். மனைவி ஏதாவது சிறு தவறு செய்து விட்டால், சமமான வயது உள்ளவர்கள் கடுமையாக அவர்களை பேசுவார்கள். இதனால் பல காதல் திருமணங்கள் கூட பிரிந்தது உண்டு. இதுவே சிறிய வயது கொண்ட பெண்ணை அவர்கள் திருமணம் செய்திருந்தால், அவளை ஒரு குழந்தையாக தான் நினைத்து திட்டி பின் கொஞ்சுவார்கள். இதானல் இவர்களுக்குள் உள்ள சண்டை விரைவாகவே முடிவுக்கு வந்து விடும். 

இது போன்ற சில விஷயங்களுக்காக தான் முன்னோர்கள் இப்படி கூரியுள்ளர்களே தவிர இது மூட நம்பிக்கை இல்லை என்பதை உணர்ந்தால் நல்லது. 

 


 

loader