பழைய ரூபாய் நோட்டுடன் கண்ணீர் வடித்த மூதாட்டிக்கு ஓடோடி வந்து உதவிய திமுக எம்எல்ஏ  நந்தகுமார் ..! குவியும் பாராட்டு..! 

பண பதிப்பிழப்பு விவரமே தெரியாமல் மூதாட்டி ஒருவர் தன்னிடம் இருந்த பழைய 500 ரூபாய் நோட்டுகளை கொண்டு வந்து மாற்றி தருமாறு மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை வைத்திருந்த நிலையில், திமுக சட்டமன்ற உறுப்பினர நந்தகுமார் 12 ஆயிரம் ரூபாயை அவருக்கு வழங்கி மேலும் காசநோய்க்கான  சிகிச்சை பெறுவதற்கும் ஏற்பாடு செய்து கொடுத்து உள்ளார் 

வேலூர் சலவன்பேட்டை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரி.இவர் பணமதிப்பிழப்பு   செய்தி தெரியாமலேயே தான் இது நாள் வரை சேர்த்து வைத்து இருந்த ரூ.500 நோட்டுகளை மாற்றித்தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்துக்கு வந்தார். இதனை அறிந்த அணைக்கட்டு எல்.எல்.ஏ நந்தகுமார் ரூ.12,000 பண உதவியும், வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை  பெறவும்  வழ வகை ஏற்படுத்தி கொடுத்து உள்ளதால் மூதாட்டி பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார் 

இது ஒரு பக்கம் இருக்க, தள்ளாடும் வயதில் சிறுக சிறுக சேர்த்து வைத்த பழைய பணத்தை  கையில் வைத்துக்கொண்டு வங்கி மேலாளரிடமும்  மூதாட்டி கேட்க, இனி எக்காரணம் கொண்டும்  பழைய  ருபாய் நோட்டுகளை மாற்ற இயலாது என தெரிவித்த உடன் கண்ணீருடன் வீடு திரும்பி உள்ளார். இந்த நிலையில் மூதாட்டி குறித்த செய்தி சமூக வலைத்தளத்தில் தீயாய்  பரவியதே தவிர உதவியது அணைக்கட்டு திமுக எம் எல் ஏ நந்தகுமார் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் நந்தகுமாருக்கு அப்பகுதி மக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  ஒரு சில நேரங்களில்  திமுகவை சேர்ந்த தொண்டர்கள் ரகளையில் ஈடுபட்டனர்... மிரட்டல் விடுத்தனர் என்ற கோணத்தில் பல செய்வதிகள் வந்தாலும் மக்களுக்கு உதவி செய்வதில் திமுக என்றும் தவறியதில்லை என்பதற்கு  உதாரணமாக அமைந்து விட்டது நந்தகுமாரின் செயல்.