Asianet News TamilAsianet News Tamil

அஜீரண கோளாறை போக்கும் தீபாவளி லேகியம்.....உங்களுக்காக  ஸ்பெஷல் ...!!!

diwali legiyam-ready-home-made
Author
First Published Oct 28, 2016, 2:29 AM IST


அஜீரண கோளாறை போக்கும் தீபாவளி லேகியம்.....உங்களுக்காக  ஸ்பெஷல் ...!!!

தீபாவளிக்கு,  இன்னும் ஒரே நாள் தான் இருக்கிறது, அதாவது நாளை மறுநாள் தீபாவளி,  எப்படியும் விதவிதமான  ஸ்வீட்ஸ் , பலகாரங்கள்  என  அனைத்தும்   இருக்கும்.  அதை  பார்க்கும் போது சாப்பிடாமலும் இருக்க முடியாது. சுவையான  பலகாரங்கள்   சாப்பிட்ட  பின் நமக்கு எப்படியும்  அஜீரண கோளாறு வரத்தான்  செய்யும்....

இந்நிலையில் அதனை  போக்குவதற்கு  லேகியம்  வீட்டிலிருந்தே  தயார்  செய்யலாம்........

தேவையான பொருட்கள் :

கொத்தமல்லி (தனியா) - கால் கப்

அரிசி திப்பிலி - 10 கிராம்

கண்டந்திப்பிலி - 10 கிராம்

சுக்கு - 10 கிராம்

சீரகம் - அரை மேசைக்கரண்டி + அரை தேக்கரண்டி

மிளகு - ஒரு மேசைக்கரண்டி

உருண்டை வெல்லம் - 100 கிராம்

வெண்ணெய் - 100 கிராம்

தேன் - அரை கப்

ஓமம் - ஒரு மேசைக்கரண்டி

கிராம்பு - 4

சித்தரத்தை - 10 கிராம்

செய்முறை :

 அரிசி திப்பிலி, கண்டந்திப்பிலி, சுக்கு, சித்தரத்தை ஆகியவற்றை இடித்து தூள் செய்துக் கொள்ளவும். 

 வெறும் வாணலியில் வெண்ணெய், வெல்லம், தேன் இவற்றை தவிர மற்ற எல்லா பொருட்களையும் ஒவ்வொன்றாக போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும். வறுபட்டவுடன் எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்கவும். ஆறியதும் ஒரு பாத்திரத்தில் போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊற வைக்கவும்.

நன்றாக ஊறியதும் எடுத்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் விழுதாக அரைக்கவும். 

 வாணலியில் வெண்ணெயை போட்டு உருக விட்டு பின்னர் அதை மற்றொரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

 வெண்ணெய் உருக்கிய அதே பாத்திரத்தில் அரைத்த விழுதை ஊற்றி 3 நிமிடம் வாசனை போகும் வரை வதக்கவும்.

பிறகு அதில் வெல்லத்தை நசுக்கி அதில் போட்டு வெல்லம் கரைந்து லேகியத்துடன் சேரும் வரை கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.

இதைப் போல 20 நிமிடம் கிளறவும். கிளறும் போது கெட்டியானால் மேலே நெய்யை ஊற்றி விட்டு கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் நன்கு சுருண்டு வரும் போது நெய் மேலே மிதக்கும் பதம் வந்ததும் இறக்கி வைத்து விடவும்.

ஆறியதும் அதை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து அதனுடன் தேனை சேர்த்து கிளறி பரிமாறவும். தீபாவளி அன்று பெருமாலான வீடுகளில் செய்யும் லேகியம் இது. இதை சாப்பிட்டால் அஜீரண கோளாறு இருக்காது......

உடனே  இதையும்  செய்ய  தயாராக  இருங்க .........

 

Follow Us:
Download App:
  • android
  • ios