Asianet News TamilAsianet News Tamil

சொன்னா கேளுங்க! இறந்தவர்களின் சடலத்திலிருந்து நோய் பரவாது! சென்னை மாநகராட்சி வேண்டுகோள்!

நோயாளிக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவருக்கே கொரோனா தாக்கி உயிரிழந்ததை அடுத்து, அவரது உடல் புதைக்க கூட இடம் தர மறுத்து உள்ளனர் மக்கள். தற்போது இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து உள்ளது. 

diseases cant spread from dead body says chennai corporation
Author
Chennai, First Published Apr 20, 2020, 7:43 PM IST

சொன்னா கேளுங்க! இறந்தவர்களின் சடலத்திலிருந்து நோய் பரவாது! சென்னை மாநகராட்சி வேண்டுகோள்!

கொரோனா நோய்த்தொற்றால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதை தடுக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது 

உடல்களை தகனம் அல்லது அடக்கம் செய்ய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன.அரசு வழிகாட்டுதலின்படி உடல்களை கவனமாக தகனம் செய்ய விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது.இறந்தவர்களின் சடலத்திலிருந்து நோய் பரவாது, அச்சமும், கவலையும் தேவையில்லை என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது 

தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு 17 ஆயிரத்தை தாண்டி உள்ளது. நாடு முழுவதும் 17,265 பேர் கொரோனாவால் பாதித்தும், 543 பேர்  உயிரிழந்தும் உள்ளனர். 2547 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1553 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

diseases cant spread from dead body says chennai corporation

இப்படி ஒரு நிலையில்,நோயாளிக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவருக்கே கொரோனா தாக்கி உயிரிழந்ததை அடுத்து, அவரது உடல் புதைக்க கூட இடம் தர மறுத்து உள்ளனர் மக்கள். தற்போது இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து உள்ளது. 

செந்தில் - தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர்- கண்டனம் 

மக்களுக்காக சேவையாற்றியவரின் உடலை அடக்கம் செய்வதை எதிர்ப்பது மனிதாபிமானமற்றது என தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் செந்தில் தெரிவித்து உள்ளார் 

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்த 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.கொலை மிரட்டல், ஊரடங்கு மீறல், தொற்றுநோய் தடுப்புச்சட்ட விதிமீறல், சிறைப்பிடித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இது குறித்து விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து உள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios