Asianet News TamilAsianet News Tamil

சாதாரண ஜுரத்திற்கும் கொரோனா ஜுரத்திற்கும் உள்ள வித்தியாசம் இது தான்..!

சாதாரண ஜுரத்தில் அறிகுறிகளாக.. காய்ச்சல் தொண்டை வலி உடல் சோர்வு இவற்றுடன் மூக்கு ஒழுகுதல்/ அடைத்தல் இருக்கும். 

difference between normal fever and corona fever
Author
Chennai, First Published Mar 9, 2020, 2:59 PM IST

சாதாரண ஜுரத்திற்கும் கொரோனா ஜுரத்திற்கும் உள்ள வித்தியாசம் இது தான்..! 

நாடு முழுக்க பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வரும் கொரோனா வைரஸ் தாக்கம்  இந்தியாவிலும் பரவ தொடங்கி தற்போது வரை 42 பேர் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் 

பொதுவாகவே,காய்ச்சல் தலைவலி,வறட்டு இருமல், மூச்சுத்திணறல் இவை மூன்றும் கொரோனா பாதிப்பின் முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகிறது. அதற்காக  காய்ச்சல் வந்தாலே  கொரோனா இருக்குமா என பயப்பட வேண்டாம். அப்படி என்றால் எதை வைத்து நமக்கு ஏற்பட்ட பாதிப்பு கொரோனா இல்லை என தெரிந்துகொள்வது தெரியுமா..? 

difference between normal fever and corona fever

சாதாரணமாக வரும் ஜுரத்திற்கும், கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறிகள் குறித்து என்ன வித்தியாசம் ??? 

சாதாரண ஜுரத்தில் அறிகுறிகளாக.. காய்ச்சல் தொண்டை வலி உடல் சோர்வு இவற்றுடன் மூக்கு ஒழுகுதல்/ அடைத்தல் இருக்கும். 

ஆனால் கொரோனா வைரஸ் தொற்றில் மூக்கு அடைத்தல் / ஒழுகுதல் போன்ற நாசி சார்ந்த அறிகுறிகள்(5%) குறைவான மக்களிடமே தென்பட்டுள்ளது. 

difference between normal fever and corona fever

மேலும் சாதாரண ப்ளூ ஏழு நாட்களுக்குள் அறிகுறிகள் சரியாகி நீங்கி விடும். ஆனால் கொரோனா தொற்று இரண்டு வாரம் முதல் மூன்று வாரம் வரை நீளும். தீவிர தொற்று உடையவர்கள் குணமாக நான்கு முதல் ஆறு வாரங்கள் வரை கூட ஆகியிருக்கிறது. இந்த அறிகுறிகளைக் காண்பவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு உடனே மருத்துவர்களை அணுகுவது சிறப்பானது.

Follow Us:
Download App:
  • android
  • ios