ராணுவத்தில் கவுரவ பதவி வகித்து வரும் தோனி இன்று லடாக்கில் இராணுவ வீரர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.

லடாக்கில் தோனி ...! சுதந்திர தினத்தன்று ராணுவ வீரர்களுடன் வீரசார பேச்சு..! 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நாட்டின் 73 ஆவது சுதந்திர தினமான இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர் மக்கள். 

ராணுவத்தில் கவுரவ பதவி வகித்து வரும் தோனி இன்று லடாக்கில் இராணுவ வீரர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். லெப்டினன்ட் கர்னல் பதவி வகித்து வரும் தோனிக்கு வழங்கப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து தற்போது பாராசூட் ரெஜிமென்ட் படை பிரிவில் பயிற்சி பெற்று வரும் தோனி தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை பற்றியும் பயிற்சி பெற்று வருகிறார். இந்த நிலையில் சுதந்திர தினமான இன்று லடாக் சென்று ராணுவ வீரர்களுடன் உரையாற்றினார். அப்போது அவருக்கு மிகுந்த வரவேற்பு கொடுத்தனர் வீரர்கள். 

தோனியின் இந்த புகைப்படத்தை அவருடைய கிரிக்கெட் ரசிகர்கள் ஆரவாரமாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.