Dhanush post: தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, மீண்டும் என் பையன்களுடன் இருப்பதில் மிக்க மகிழ்ச்சி...! என்று குறிப்பிட்டுள்ளார்.அந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் 18 ஆண்டுகள் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த, தனுஷ், ஐஸ்வர்யா தம்பதி கடந்த ஜனவரி மாதம் பிரிய முடிவு செய்து பரஸ்பர அறிக்கையை வெளியிட்டனர்.

இந்த செய்தி பட்டி தொட்டி எங்கும் தீயாய் பரவியது. இது அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்களின் பிரிவுக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. ஆனாலும் அரசல்புரசலாக பல்வேறு யூகச் செய்திகள் வெளியாகி வருகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.இவர்கள் இருவரும் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என திரையலக பிரபலங்கள், ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர்.

குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் இதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.குறிப்பாக இருவரது நட்பு வட்டாரத்தினரும், அவர்களை மீண்டும் சேர்ந்து வைக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தனர்.

ஆனால், பிரிவை அறிவித்த பிறகு அது பற்றி தனுஷ் இதுவரை மீடியாக்களிடம் ஏதும் பேசவில்லை. தற்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் தங்களின் வேளைகளில் பிஸியாக இருந்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் வாத்தி, அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் ஆகிய படங்களில் தனுஷ் நடித்து வருகிறார். மாளவிகாவுடன் தனுஷ் நடித்த மாறன் படம் மார்ச் 11ம் தேதி ஹாட்ஸ்டாரில் ரிலீசாக உள்ளது.

இதே போல் ஐஸ்வர்யாவும் தமிழ், மலையாளம், மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகும் முஷாஃபிர் என்ற மியூசிக் வீடியோவை இயக்கி உள்ளார். இந்த வீடியோ மார்ச் 8 ம் தேதி வெளியாக உள்ளது.இப்பாடலை தமிழில் அனிருத், தெலுங்கில் சாகர், மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்த் ஆகியோர் பாடியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

இதையடுத்து அவர்களின் பிரிவு தற்காலிகமானது தான் என்றும், விரைவில் ஒன்றிணைவார்கள் என்றும் கூறப்பட்டது. அப்பாவின் வேண்டுகோளை ஏற்று தனுஷுடன் இணைய ஐஸ்வர்யா தயாராக இருப்பதாகவும், ஆனால் அதற்கு தனுஷ் செவி சாய்க்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில், தற்போது தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய பாசமாக நாய்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதில், ஒரு நீண்ட சந்திப்பு!! மீண்டும் என் பையன்களுடன் இருப்பதில் மிக்க மகிழ்ச்சி! என்று பதிவிட்டுள்ளார்.

View post on Instagram

இந்த தகவல் தனுஷ் மீண்டும், ஐஸ்வர்யா வசிக்கும் வீட்டிற்கு சென்று விட்டாரோ..? என்ற கேள்வியை நெட்டிசன்கள் மத்தியில் எல செய்துள்ளது.. இருப்பினும், அவரது ரசிகர்கள் தனுஷ் -ஐஸ்வர்யா மீண்டும் இணைந்தால் மகிழ்ச்சி என்று தெரிவித்து வருகின்றனர். 

மேலும் படிக்க...Poonam Bajwa hot: படுக்கையில் படுத்து ஹாட் போஸ் கொடுத்த பூனம் பஜ்வா...குட்டை டவுசரில் கியூட் சிரிப்பு..!