டெங்கு எச்சரிக்கையும் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கையும்..! 

கொசுக்களால் ஏற்படக்கூடிய டெங்கு பாதிப்பு எப்படி இருக்கும் என்பதையும், நம் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்தும் அதனை தடுக்க என்னென்ன வழிமுறைகள், டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் ரத்த பரிசோதனை உள்ளிட்ட அனைத்து விதமான நடவடிக்கை பற்றியும் நாம் பார்த்தோம்

அதில் குறிப்பாக நாம் மேற்கொள்ள வேண்டிய சில முக்கிய குறிப்புகளை இங்கே பார்க்கலாம்.

நம் வீட்டிற்குள்ளும், வீட்டை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது நல்லது. அவ்வாறு தண்ணீர் தேங்கினால் அதில் உருவாகக்கூடிய கொசுக்கள் தான் நமக்கு டெங்குவை ஏற்படுத்தும்.

ஒருவேளை டெங்குவால் பாதிப்பு ஏற்பட்ட உடன் தொடர்ந்து மூன்று நாட்கள் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான ரத்த பரிசோதனையை செய்துகொள்வது நல்லது. அதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் குழந்தைகளுக்கு டெங்குவால் பாதிப்பு ஏற்படும்போது நீர்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இது அதி முக்கியமான ஒன்று.

மேலும்,தொடர்ந்து குழந்தைகளுக்கு காய்ச்சல் இருக்கும் சமயத்தில் அவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் உடனிருந்து, நீர்சத்து குறையாமல் தக்க சத்து உணவை கொடுத்து பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக நீர் சத்து அதிகமாக உள்ள பழங்களை கொடுக்க வேண்டும்.

காய்ச்சல் அதிகமாக இருக்கும் போது ஒரு துணியை தண்ணீரில் நனைத்து நன்கு பிழிந்து பின்னர் உடல் முழுக்க துடைத்து விடலாம். அவ்வாறு செய்யும்போது காய்ச்சல் கட்டுக்குள் வரும். தொடர்ந்து ஏற்படும் தலைவலி, உடல் சோர்வு, வாந்தி, வயிற்று வலி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது. மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக இரத்த பரிசோதனை எடுத்துக்கொள்வது மட்டுமல்லாது காய்ச்சி அதிகரிக்காமல் இருக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது அதற்கு தேவையான மருந்துகளையும் ஈரத் துணியை கொண்டு உடல் முழுக்க துடைத்து எடுப்பதும் மிக முக்கியமான ஒன்று.

டெங்குவை பற்றி பல முக்கிய விஷயங்கள் நமக்கு இப்போது தெரிந்திருந்தாலும், கண்டிப்பாக இந்த ஒரு விஷயத்தை நீங்க எப்போதுமே மறக்கவே கூடாது. அது என்னவென்றால் டெங்குவால் பாதித்த பின், மூன்று நாட்கள் காய்ச்சல் இருந்து அதிலிருந்து மீண்டு வருவது ஒரு விதம். நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு அப்படியே ஒரு வாரம் சென்றுவிட்டால், அதாவது குறைந்தது ஒரு வாரம் ஏழு நாட்கள் சென்று விட்டால், அதன் பிறகு காய்ச்சல் கட்டுக்குள் கொண்டு வருவது மிகவும் சிரமத்தை ஏற்படுத்திவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரத்தத்தில் உள்ள ரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை டெங்கு வைரஸ் சிதைக்க செய்யும். இதற்கான வாய்ப்பே கொடுக்காமல் தக்க சமயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது சிறந்தது. டெங்குவை பற்றி பல முக்கிய  விஷயங்கள் நமக்கு இப்போது தெரிந்திருந்தாலும் கண்டிப்பாக இந்த ஒரு விஷயத்தை நீங்க எப்போதுமே மறக்கவே கூடாது. அது என்னவென்றால் டெங்குவால் பாதித்த பின், மூன்று நாட்கள் காய்ச்சல் இருந்து அதிலிருந்து மீண்டு வருவது ஒரு விதம். நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு அப்படியே ஒரு வாரம் சென்றுவிட்டால் அதாவது குறைந்தது ஒரு வாரம் ஏழு நாட்கள் சென்று விட்டால் அதன் பிறகு காய்ச்சல் கட்டுக்குள் கொண்டு வருவது மிகவும் சிரமத்தை ஏற்படுத்திவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரத்தத்தில் உள்ள ரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை டெங்கு வைரஸ் சிதைக்க செய்யும் இதற்கான வாய்ப்பே கொடுக்காமல் தக்க சமயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது சிறந்தது.