Asianet News TamilAsianet News Tamil

டெங்கு காய்ச்சல் : அறிகுறிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

Dengue Fever Symptoms : டெங்கு ஒரு கொடிய நோய் என்பதால் அது வராமல் இருக்க அதன் அறிகுறிகள் காரணங்கள், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை பற்றி இந்த கட்டுரையில் நாம் பார்க்கலாம்.

dengue fever causes symptoms treatment and its prevention measures in tamil mks
Author
First Published Jul 16, 2024, 11:23 AM IST | Last Updated Jul 16, 2024, 11:40 AM IST

மழைக்காலம் வந்தாலே கூடவே டெங்கு, மலரியா போன்ற கொசுக்களால் பரவும் நோய்களும் வந்துவிடுகிறது. இதன் காரணமாக இந்த கொசுக்கள் ஆனது இரவு, பகல் என்று பாராமல் எந்த நேரத்திலும் கிடைக்கக்கூடும். அதிலும் குறிப்பாக, இந்த காலகட்டத்தில் டெங்கு பரவலின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

டெங்குவால் ஒரு நபர் பாதிக்கப்பட்டால் அவருக்கு சரியான நேரத்தில் சரியான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது அவரது உயிருக்கு ஆபத்தாகிவிடும். தற்போது கொடிய நோயான டெங்கு அதன் சிறகுகளை விரித்து தனது ஆட்டத்தை காட்ட ஆரம்பமாகிவிட்டது என்று  சொல்லலாம். இத்தகைய சூழ்நிலையில், டெங்குவின் அறிகுறிகள், தடுப்பு மற்றும் சிகிச்சை பற்றி சரியான தகவல்களை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். இதன் மூலம் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் இந்த தொற்று நோயிலிருந்து பாதுகாக்க முடியும். எனவே, இந்த கட்டுரையில் டெங்குவின் அறிகுறிகள், காரணங்கள் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை போன்றவற்றை பற்றி பார்க்கலாம். 

இதையும் படிங்க: Dengue Fever: தொடர் மழை எதிரொலி; மதுரை அரசு மருத்துவமனையில் 25 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு

டெங்கு என்றால் என்ன?:
டெங்கு என்பது கொசுக்களால் பரவும் ஒரு வகை தொற்று நோயாகும். இதன் முதல் அறிகுறி பொதுவாக வரும் காய்ச்சல். இருப்பினும் இந்த தொற்று நோயில் பல அறிகுறிகள் உள்ளன. அதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்:

  • கடுமையான தலைவலி
  • காய்ச்சல்
  • கண் வலி
  • சொறி பிரச்சனை 
  • மூட்டுகளில் கடுமையான வலி
  • எலும்பு அல்லது தசை வலி
  • குமட்டல் அல்லது வாந்தி

இதையும் படிங்க: Dengue : தமிழகம்.. 9 மாவட்டங்களில் அதிகரித்த டெங்கு.. வழிகாட்டுதல் வெளியீடு - நம்மை காத்துக்கொள்வது எப்படி?

டெங்கு காய்ச்சல் எப்படி பரவுகிறது?:
ஏடிஸ் எஜிப்டி மற்றும் ஏடிஸ் அல்போபிக்டஸ் என்ற பெண் கொசுக்கள் கடிப்பதால் டெங்கு பரவுகிறது. இந்த கொசுக்கள் ஜிகா வைரஸ் மற்றும் சிக்கன் குனியாவையும் பரப்பும். இந்த தொற்று சில சமயங்களில் உயிரிழப்பையும் கூட ஏற்படுத்தும்.

டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை:
டெங்கு வைரஸால் பாதிக்கப்பட்டவருக்கு எந்த ஒரு வகையிலும் சிகிச்சை சாத்தியமில்லை. டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளை கருத்தில் கொண்டு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த அறிகுறிகளை கண்டறிந்த பிறகு பாதிக்கப்பட்ட நபர் தாமதிக்காமல் உடனே மருத்துவர் அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்வது மிகவும் முக்கியம். குறிப்பாக, இந்த காலகட்டத்தில் முழு ஓய்வு எடுத்து முடிந்தவரை தண்ணீர் குடிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

அதுபோல, டெங்கு சிகிச்சையில் அதிக தாமதம் ஏற்பட்டால் அது டெங்கு ரத்த கசிவு (DHF) காய்ச்சலை உண்டாக்கும். இது மிகவும் ஆபத்தானது. குறிப்பாக, இது பத்து வயது கூறப்பட்ட குழந்தைகளுக்கு இந்த பிரச்சனை அதிகமாகவே ஏற்படும். இதனால் அவர்கள் கடுமையான வயிற்று வலி, இரத்தப்போக்கு மற்றும் அதிர்ச்சி போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்படலாம்.

டெங்கு தடுப்பு நடவடிக்கைகள்:
டெங்குவை தடுக்க தற்போது எந்த தடுப்பூசி எதுவும் இல்லை. ஆனால், அதை தடுக்க சில விழிப்புணர்வு மிகவும் முக்கியமானது. டெங்கு வைரஸ் கொசுக்களால் தான் பரவுகிறது. எனவே, வீட்டில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இதற்காக சில வழிமுறைகளை மற்றும் பின்பற்றினால் போதும். அவை..

  • வாளி மற்றும் டிரம்களில் சேமிக்கப்படும் தண்ணீரை எப்போதும் மூடி வைக்கவும். இவற்றில் தான் டெங்கு கொசுக்கள் முட்டையிடும்.
  • அதுபோல நீங்கள் இரவு தூங்கும் போது கொசுவலை பயன்படுத்துங்கள். மேலும், அவ்வப்போது வீட்டை சுத்தம் செய்யுங்கள்.
  • உங்கள் வீட்டில் தண்ணீர் எங்கேயாவது தேங்கி இருந்தால் உடனே அதை அப்புறப்படுத்துங்கள். அல்லது தேங்காய்மால் பார்த்துக் கொள்ளுங்கள்.
  • மாலை வேளையில் ஜன்னல் மற்றும் கதவுகளை மூடி விடுங்கள். குறிப்பாக, குழந்தைகளுக்கு முழு கை ஆடையை அணியுங்கள்.

டெங்கு கொசுக்கள் பகலில் மட்டும் தான் கடிக்குமா?:
டெங்கு கொசுக்கள் பகலில் மட்டும் தான் கடிக்கும் என்ற தவறான எண்ணம் மக்கள் மத்தியில் பரவலாக பரவியுள்ளது. ஆனால், அது தவறு. டெங்கு கொசுக்கள் நேரம் காலம் என்று பார்க்காமல், பகல் இரவு என எந்த நேரத்தில் கூட கடிக்கலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios