அசத்தலான சுவையில் மீல்மேக்கர் பிரியாணி!!

Meal Maker Biryani Recipe : இந்த கட்டுரையில் மீல்மேக்கர் பிரியாணி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

delicious meal maker biryani recipe in tamil mks

பிரியாணி என்றால் யாருக்கு தான் பிடிக்காது. மூன்று வேலையும் பிரியாணி கொடுத்தால் கூட அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக, சைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று எதுவென்றால் அது பிரியாணி தான். சைவ பிரியாணிகள் பல வகை உண்டு. அவை.. வெஜிடபிள் பிரியாணி, மஸ்ரூம் பிரியாணி, பன்னீர் பிரியாணி சோயா பிரியாணி ஏன் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வகையில் இன்றைய கட்டுரையில் நாம் பார்க்கப் போவது மீல்மேக்கர் பிரியாணி தான். இந்த பிரியாணி சாப்பிடுவதற்கு சுவையாகவும் செய்வதற்கு மிகவும் எளிதாகவும் இருக்கும். நீங்கள் ஒருமுறை இந்த ரெசிபியை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுங்கள், அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் மீல்மேக்கர் பிரியாணி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  தேங்காய் பாலும், பட்டாணியும் வச்சு இப்படி ஒருமுறை பிரியாணி செஞ்சு பாருங்க... அடிக்கடி இதைத்தான் செய்வீங்க!

மீல்மேக்கர் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் : 
பாஸ்மதி அரிசி - 1 கப்
மீல்மேக்கர் - 1 கப்
பெரிய வெங்காயம் - 1 (நீளமாக நறுக்கியது)
தக்காளி - 1 (நீளமாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1/4 ஸ்பூன்
கரமசாலாத் தூள் - 1/4 ஸ்பூன்
பட்டை - 1 ஸ்பூன்
கிராம்பு - 2
சோம்பு - 1/2 ஸ்பூன்
பிரியாணி இலை - 1
ஏலக்காய் - 1
புதினா - சிறிதளவு 
கொத்தமல்லி இலை - சிறிதளவு (நறுக்கியது)
உப்பு - சுவைக்கு ஏற்ப
தண்ணீர் - 2 கப்
நெய் - 1 ஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்

இதையும் படிங்க:  Fish Biryani: சுவையான ருசியில் அருமையான மீன் பிரியாணி; ரெசிபி இதோ!

செய்முறை :  

மீல் மேக்கரில் பிரியாணி செய்ய முதலில், எடுத்து வைத்த பாஸ்மதி அரிசியை தண்ணீரில் நன்கு கழுவி 2 நிமிடம் ஊற வைக்கவும். அடுத்து சூடான நீரில் மீல்மேக்கர் மற்றும் உப்பு சேர்த்து சிறிது நேரம் ஊற வையுங்கள். மீல் மேக்கர் நன்கு ஊறியதும், தண்ணீரை வடிகட்டி அதில் இருக்கும் தண்ணீரை பிழிந்து, மீல்மேக்கரை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் நெய், எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, ஏலக்காய் கிராம்பு, பிரியாணி இலை சோம்பு, ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பிறகு அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். 

பின் அதில் நறுக்கி வைத்த தக்காளியின் சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும். பின் அதில் கரம் மசாலா தூள் மற்றும் மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பிறகு அதில், புதினா, கொத்தமல்லியை சேர்த்து ஒரு முறை வதக்கி கொள்ளுங்கள். அடுத்த அதில் தண்ணீரை ஊற்றி ஒரு முறை கொதிக்க விடுங்கள். 

தண்ணீர் நன்றாக கொதித்ததும் அதில் சிறிதளவு உப்பு, மீல் மேக்கர், ஊறவைத்த அரிசி ஆகியவற்ற சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும். குக்கரில் விசில் போனவுடன் ஒரு முறை கிளறி விடுங்கள். அவ்வளவுதான் டேஸ்டான மீல்மேக்கர் பிரியாணி தயார். இந்த பிரியாணியுடன் நீங்கள் வெங்காயம் தயிர் பச்சடி வைத்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios