ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் நகர்ந்த "இறந்த உடல்"..! பகீர் கிளப்பும் புது சமாச்சாரம் ..!

இறந்த பிறகு சடலமொன்று ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் ஒரு குறிப்பிட்ட சென்டிமீட்டர் தொலைவு நகர்ந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் ஆராய்ச்சியாளர்கள் இது குறித்து மேற்கொண்ட ஓர் ஆராய்ச்சியின் மூலமாக இந்த அதிர்ச்சி சம்பவம் தெரியவந்துள்ளது. அதன்படி இறந்த உடலின் சடலத்தை ஆய்விற்காக வைத்து அதனை சுற்றி பல கேமராக்களை வைத்து தொடர்ந்து 17 மாதங்கள் கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

பின்னர் இதனை சோதனை செய்த போது, அந்த உடல் 30 நிமிடத்திற்கு ஒரு முறை சில  சென்டி மீட்டர் தொலைவு நகர்வதை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். 

இதுதொடர்பாக ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவிக்கும்போது, "சடலம் ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் சிறிது தூரம் நகர்கிறது.. இதை முழுமையாக விளக்க முடியவில்லை.. இதற்கான சரியான காரணத்தையும் கூற முடியவில்லை... ஆனால் என்னுடைய கணிப்பின்படி உடல் சிதைவு தொடங்குவதை குறிக்கும் வகையில் சடலம்  நகர்ந்து இருக்கலாம்" என தெரிவித்து உள்ளார்.