தேசிய குற்ற பதிவுகள் பணியகம் கூறப்பட்டுள்ளதாவது: 2009 ஜனவரி 1 முதல் 2018 டிசம்பர் 31ம் தேதி வரையிலான 10 ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 81,758 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 

2018ல் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.  கடந்த 2018ம் ஆண்டில் நம் நாட்டில் மொத்தம் 1.3 லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 

இதில் மாணவர்கள் மட்டும் 8 சதவீதம் பேர். அதாவது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அந்த ஆண்டில் ஒவ்வொரு 24 மணி நேரத்துக்கும் 28 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகளில் தோல்வி, மனஅழுத்ததுக்கான மருந்துகள், குடும்பங்கள் சிதறுவது மற்றும் பிரேக் அப் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். 

சமூகவியலாளர்கள் மற்றும் உரிமை ஆர்வலர்கள் இதனை மனோ-சமூக பிரச்சனை என்று குறிப்பிடுகின்றனர். நம்பிக்கை இழக்காமல் மற்றும் மனம் தளராமல் இருந்தாலே மாணவர்களுக்கு தற்கொலை எண்ணம் வராது.