சமையல் கியாஸ் மீதான மத்திய அரசு ஒதுக்கி வரும் மானிய தொகை தொடர்பாக சில மாற்றத்தை கொண்டு வர உள்ளது மத்திய அரசு. அதன் படி, சமையல் கியாஸ், மண்எண்ணை போன்றவற்றிற்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது. இதற்காக மட்டும் ரூ.37 ஆயிரம் கோடியை ஒதுக்குகிறது மத்திய அரசு

இதில் சமையல் சமையல் கியாசுக்கு மட்டுமே ரூ.31 ஆயிரத்து 169 கோடி செலவிடப்படுவதால், இதில் மாற்றம் கொண்டுவர திட்டமிட்டு உள்ளது மத்திய அரசு. அதன் படி, ரூ.5 லட்சத்துக்கு மேல் உள்ளவர்களுக்கு சமையல் கியாஸ் மானியம் ரத்து செய்ய ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளது. அதே போன்று சொந்தமாக கார் வைத்திருப்பவர்களும் மானியம் பெற தகுதி இல்லாதவர்கள் என கூறப்படுகிறது. அதே போன்று சிலிண்டரின் எண்ணிக்கையும் குறைக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது

அதாவது,மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியில் "பிரதமரின் சமையல் கியாஸ் திட்டத்துக்கு மட்டுமே" புதிதாக 7 கோடியே 10 லட்சம் புதிய இணைப்புகள் கொடுக்கப்பட்டு மக்கள் பயன்பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் குறைந்த பட்சம் 160 ரூபாயிலிருந்து ரூ.250  வரை மானியம் கிடைக்கிறது.

எனவே இந்த சுமையை குறைக்கும் பொருட்டு, சிலிண்டர் மீதான மானியம் குறைக்க ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறதாம் மத்திய அரசு. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.