ஒரு பெண் கண்ணடிச்சத உலகம் முழுதும் பரப்புறீங்க...நெத்தியதடி கேள்வி கேட்டு அனைவரையும் தலைகுனிய வைத்த ராணுவ வீரர்..! 
ஆனால் ஒரு  ராணுவ வீரரின் நிலை இப்படியா..? 

நேற்று முன்தினம் காஷ்மீரில் நடந்த புல்வாமா பயங்கரவாதிகளின் தாக்குதலில் 44 ராணுவ வீரர்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுக்க அனைவரும் பெரும் கண்டனக் குரலை எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பல்வேறு உலக நாடுகளும் இதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளது. இறந்தவர்களில் 2 ராணுவ வீரர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் நிதி உதவி உடனடியாக அளிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க ராணுவ வீரர்களின் கஷ்டங்கள் என்ன? அவர்கள் நாட்டுக்காக தங்கள் குடும்பத்தையும் மனைவி குழந்தைகள் என அனைவரையும் பார்க்காமலும், நினைத்த நேரத்தில் பேச முடியாமலும் தங்களுடைய முழு நேரத்தையும் நாட்டுக்காக எல்லையோரத்தில் காத்திருக்கின்றனர். மக்கள் இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும் என மிகவும் மனமுடைந்து ராணுவ வீரர் ஒருவர்  வீடியோ மூலம் பேசி வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றது. அந்த வீடியோவில் அவர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளைப் பற்றியும் கேள்வி எழுப்பி உள்ளார். இந்த நாட்டில் நடிகர்களுக்கு கொடுக்கப்படும் ஒரு முக்கியத்துவம் நாட்டின் உண்மையான ஹீரோ என்று போற்றப்படும் இராணுவத்தினருக்கு கொடுக்கப்படுவதில்லை என்று மனமுருகி பேசியுள்ளார். எத்தனையோ படங்களில் கதாநாயகன் கூறும் வசனம் "நாட்டு எல்லையில் காத்திருந்து நம் நாட்டையே காக்கும் வீரர்கள்தான் உண்மையான ஹீரோக்கள்" என வீரவசனம் பேசி சினிமாவில் வெளிப்படுத்துவார்கள்.

ஆனால் உண்மையில் ஒரு இராணுவ வீரர் இறந்துவிட்டால் எந்த ஒரு ராணுவ வீரருக்காவது நேரில் சென்று அஞ்சலி செலுத்தியது உண்டா? என நெத்தியடி கேள்வியை முன்வைத்து உள்ளார். ஒரு நடிகர் ஏதோ ஒரு வார்த்தை பேசினாலும், அதை சர்ச்சையாகி அதற்காக பட்டிமன்றம் நடத்துவதும், விவாத மேடைகளில் விவாதம் செய்யும் அளவுக்கு தான் இன்றைய ஊடகங்கள் இருக்கிறது என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களுக்கு தேவையான விஷயங்களை கொண்டு செல்லுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனையெல்லாம் தாண்டி கடைசியாக அவர் சொன்ன ஒரு விஷயம் "கேரளாவில் யாரோ ஒருவர் கண்ணடித்தால் இந்தியா முழுக்க சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பரப்பப்பட்டு வருகின்றது. ஆனால் ஒரு ராணுவ வீரர் அவருடைய கஷ்டங்களை கூறுகின்றனர்.. நாட்டுக்காக போராடுகின்றனர்.. அவர்களுடைய ஒரு எந்த ஒரு விஷயமும் யாரும் பகிர்வதற்கு யோசனை செய்கின்றார்கள்.

ஆக மொத்தத்தில் உண்மையான விஷயங்களும் தேவையான விஷயங்களும் மக்களை சென்றடைவதே கிடையாது என பெருத்த வேதனை தெரிவித்துள்ளார். அந்த ராணுவ வீரரின் பேச்சு பார்க்கும்போது அவர் வெளியிட்டு இருக்கும் அனைத்து விமர்சனங்களும் அனைவரையும் ஒரு நிமிடமாவது சிந்திக்க வைக்கும் வண்ணம் உள்ளது என்பதை நம்மால் உணர முடிகிறது

இனியாவது மாற்றம் ஏற்படுமா ? மாற்றம் ஒன்றே மாறாதது நிரூபணம் ஆகுமா..? பொறுத்திருந்து பார்க்கலாம்.