கயிறு கட்டிலில்... துடிதுடிக்கும் பிரசவ வலியில் கர்ப்பிணி பெண்..! அடர்ந்த காட்டு பகுதியில்.. 6 கிமீ .. திக் திக்.. அடுத்து நடந்தது என்ன..?  

சத்தீஸ்கர் மாநிலத்தில் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் வழக்கமாக சிஆர்பிஎஃப் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு உள்ள படேடா என்ற குக்கிராமத்தில் நிறைமாத கர்ப்பிணி பிரசவ வலியில் துடித்து உள்ளார்.

பின்னர் அவருடைய உறவினர்கள் இந்த தகவலை ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த சிஆர்பிஎஃப் வீரர்களிடம் தெரிவிக்கவே விரைந்து வந்த வீரர்கள் அப்பெண்ணிற்கு உதவி செய்ய முன் வந்தனர். முதலில் முதலுதவி செய்து அப்பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டனர். இருந்தாலும் இரவு நேரம் அடர்ந்த காட்டுப்பகுதி என்பதால் அவ்வழியாக செல்வது சற்று சிரமம் இருந்தது.

இதனை தொடர்ந்து மிகுந்த பிரசவ வலியால் துடித்த அப்பெண்ணை அவருடைய வீட்டில் இருந்த கயிறு கட்டிலில் படுக்க வைத்து நான்கு புறமும் கயிறால் கட்டி சிஆர்பிஎஃப் வீரர்கள் ஓர் ஊஞ்சல் போன்று உருவாக்கினர். பின்னர் அவரை அப்படியே சுமந்து சென்று சுமார் 6 கிலோமீட்டர் தூரம் பயணித்து பிரதான சாலையை அடைந்த பின்னர் பீஜப்பூர் மாவட்ட மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றனர்.

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் தக்க சமயத்தில் பிரசவ வலியால் துடித்த பெண்ணிற்கு உதவி செய்ததை அறிந்த கிராம மக்கள் வீரர்களுக்கு நன்றியை தெரிவித்து நிகழ்ச்சி அடைந்தனர்.