ஒரு முறை கூட தன் குழந்தை முகத்தை பார்க்காமல் நாட்டுக்காக உயிரை விட்ட வீரர்..! 

தான் பெற்ற  குழந்தையை ஒரு முறை கூட பார்க்காமல், நாட்டுக்காக்க உயிர் நீத்துள்ளார் ராஜஸ்தான் மாநிலத்தை சார்ந்த ராணுவ வீரர் ரோஹிதாஷ் லம்பா. இவருக்கு கடந்த டிசம்பர் மாதம் பெண் குழந்தை  பிறந்தது. அவ்வப்போது போனில் மட்டுமே குழந்தையின் நலம் விசாரித்து வந்த ரோஹிதாஷ் லம்பா,விரைவில் விடுமுறைக்கு வீடு திரும்பி குழந்தையை பார்க்க இருந்துள்ளார்.

இதற்கிடையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திபுராவில் உள்ள கோரிபொரா பகுதியில் 70 வாகனங்களில் அதிகாரிகள் உள்பட மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் மீது பயங்கரவாத அமைப்பினை சேர்ந்த தற்கொலை படை தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை ஏற்றி சென்ற வாகனத்தைக் கொண்டு மோதி தாக்குதல் நடத்தினர்.

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பினை சேர்ந்த தற்கொலை படை தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை ஏற்றி சென்ற வாகனத்தைக் கொண்டு மோதி தாக்குதல் நடத்தினர்.இதில் 44 பேர் உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கி உள்ளது. இந்த கோர தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ராஜஸ்தான் மாநிலத்தை சார்ந்த ராணுவ வீரரை ரோஹிதாஷ் லம்பாவும் ஒருவர்.

டிசம்பரில் பிறந்த தனது குழந்தையை இதுவரை ஒருமுறை கூட பார்க்கவே இல்லை. ஒரு தந்தைக்கு நடக்க கூடாத கொடுமையான நிகழ்வு இது என அனைவரும் உருக்கம் தெரிவிக்கின்றனர்.