கிரிக்கெட் பிரியர்களே..! அம்பயர் ஆக ஆசையா...? இதோ அதிர்ஷ்ட வாய்ப்பு..!

இந்திய மக்களுக்கு கிரிக்கெட் என்றால் உயிர் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு கிரிக்கெட் மீது அதிக மோகம் கொண்டவர்கள். அதிலும் குறிப்பாக எந்த ஒரு விளையாட்டாக இருந்தாலும் அதில் நடுவர்கள் அவசியம் தேவைப் படுவார்கள் அல்லவா..?  ஆனால் அவர்களின் பணி அவ்வளவு எளிதான ஒன்று அல்ல ஒரு சிறிய தவறு என்றாலும் கூட பல்வேறு விமர்சனத்திற்கு ஆளாக நேரிடும். 

cricket umpire Desire

இந்திய மக்களுக்கு கிரிக்கெட் என்றால் உயிர் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு கிரிக்கெட் மீது அதிக மோகம் கொண்டவர்கள். அதிலும் குறிப்பாக எந்த ஒரு விளையாட்டாக இருந்தாலும் அதில் நடுவர்கள் அவசியம் தேவைப் படுவார்கள் அல்லவா..?  ஆனால் அவர்களின் பணி அவ்வளவு எளிதான ஒன்று அல்ல ஒரு சிறிய தவறு என்றாலும் கூட பல்வேறு விமர்சனத்திற்கு ஆளாக நேரிடும். இதையெல்லாம் தாண்டி ஒரு கிரிக்கெட் அம்பயர் ஆக விரும்பினால் முதலில் கிரிக்கெட் பற்றிய 42 விதிமுறைகளை தெரிந்திருக்க வேண்டும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

 cricket umpire Desire

துல்லியமாக கவனிக்க கூடிய ஆற்றல் மற்றும் திறமை கொண்டவராக அவர் இருக்க வேண்டும். மேலும் ஒரு நடுவருக்கு பொறுமையும் சகிப்புத்தன்மையும் மிக மிக அதிகம் தேவைப்படும். அடிப்படையான இந்த பண்புகளை பெற்று இருந்தால் மட்டுமே அம்பயர் ஆக முடியும். முதலில் கிரிக்கெட் விளையாடுவதுவதுடன் மாநில கிரிக்கெட் கவுன்சிலில் தங்களது பெயரை பதிவு செய்தல் வேண்டும்.

பின்னர் அதற்கான தேர்வு எழுத வேண்டும். இதில் தேர்வு மற்றும் பிராக்டிகல் இரண்டும் அடங்கியது. இதில் தேர்ச்சி பெற்றால் மும்பையில் உள்ள கிரிக்கெட் அம்பயரிங்-இல், எம்சிஏ முதுநிலை படிப்பில் சேர வேண்டும். பின்னர் கிரிக்கெட் கவுன்சில் பிசிசிஐ இதற்கான தேர்வை நடத்தும். இந்த தேர்வு இரண்டு விதமாக நடைபெறும். இவை இரண்டிலும் தேர்ச்சி பெற்றால் அம்பயர் பேனல் அமைப்பில் தேர்ச்சி பெற்றவர் பெயர் இடம்பெறும். cricket umpire Desire

இவர்கள் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் போட்டிகளில் நடுவராக பங்கேற்கக் கூடிய தகுதி பெறுவார்கள். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அம்பயர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பின்னர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் போட்டிகளுக்கு நடுவராக பணி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் 90 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெறுபவர்கள் தான் சர்வதேச நடுவருக்கான வாய்ப்பை பெறுவார்கள்.

தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கு நடுவராக சென்றால், ஆட்டம் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய் சம்பளமாக கிடைக்கும். சர்வதேச போட்டியில் நடுவராக சென்றால் 55 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும். இதுதவிர பல்வேறு மாநில அளவிலான கிரிக்கெட் அமைப்புகள் மற்றும் தனியாக கிரிக்கெட் அகாடமி உள்ளிட்டவற்றில் நடுவர் பணிக்கு நல்ல சம்பளம் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.cricket umpire Desire

 உள்ளூரில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளுக்கு கூட பதிவு செய்யப்பட்ட அம்பயர் அழைக்கப்படுகிறார்கள் எனவே கிரிக்கெட் துறையில் சாதிக்க வேண்டும் என நினைப்பவர்கள் அம்பயர் ஆக வேண்டும் என நினைத்தால் அதற்கான முதல் தகுதியாக 42 விதிகளை தெரிந்துகொண்டு, ஒரு சில அடிப்படை பண்புகளையும் வளர்த்துக் கொண்டு பின்னர் முறையாக தேர்ச்சி பெறுவது நல்லது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios