மத மாற்றத்திற்கு எதிராக C.S.R வழக்கு பதிந்து போலீசார் அதிரடி..! 

இந்தியாவில் முதல் முறையாக மத மாற்றத்துக்கு எதிராக முதல் C.S.R. வழக்கு, கோவை பெரிய நாயக்கன் பாளையம் காவல் நிலையத்தில் பதியப்பட்ட விவகாரம் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியாவில் மதமாற்றம் என்பது, அவரவர் விருப்பத்திற்கு இருந்து வந்தது. அதிலும் அவ்வப்போது சில குற்றசாட்டு எழுந்த வண்ணம் இருந்தது.

தம் மதத்தை பற்றி, மற்ற மதத்தவரிடம் எடுத்துரைத்து கேட்போரின் மனநிலையில் மாற்றத்தை கொண்டு வந்து, எப்படியாவது மத மாற்றம் செய்து விடலாம் என நினைத்து, இதற்காகவே வீடு வீடாய் சென்று  போஸ்டர் கொடுப்பதும், ஆள் சேர்ப்பதும், கூட்டம் நடத்துவதுமாக இருந்து வந்த சில விஷயம் தற்போது வெளிச்சத்திற்கு வர தொடங்கி உள்ளது.

ஒரு சிலர் உண்மையில் மனதளவில் மாற்றமடைந்து வேறு மதத்திற்கு மாறுவது உண்டு. ஒரு சிலர் ஆதாயம் தேடி மதமாற்றம் செய்வதையும் பார்க்க முடியும். இந்த நிலையில், கோவை மாவட்டம் சாமிசெட்டி பாளையத்தில் வசித்து வரும் செல்வராஜ் என்பவரின் மகள் பவித்ரா கோவை பெரியநாயக்கன் பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன்படி, கடந்த 8 ஆம் தேதி, தனியாக நான் வீட்டில் இருந்த போது திவ்யா என்ற பெண்மணி தன் வீட்டிற்கு வந்து பைபிள் புத்தகத்தை கொடுத்து, தான் எகோவா சாட்சி என்றும், கடவுளை பற்றி சொல்ல வந்ததாகவும் தங்களுடைய கடவுள் தான் உண்மையானவர் என்று வழிபட சொல்லி தொடர்ந்து வற்புறுத்தியதாகவும் திவ்யா என்ற பெண்மணி மீது பவித்ரா புகார் கொடுத்துள்ளார்.

அதன்படி திவ்யாவிடம் தக்க விசாரணை மேற்கொண்டு,நடவடிக்கை எடுக்க வேண்டும் என பவித்ரா கேட்டுக்கொண்டு உள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் இந்தியாவிலேயே முதல்முறையாக மதமாற்றத்திற்கு எதிராக சிஎஸ்ஆர் பதிவு செய்துள்ளது கோவை பெரியநாயக்கன் காவல் நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது.