கணவனுக்கு உதவி தொகை வழங்க மனைவிக்கு ஆணையிட்டது கோர்ட் ....!!!

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அனில் என்பவருக்கும் - சரிதாவுக்கும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.சரிதா நன்கு படித்தவர், ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார். ஆனால் அனில் அவ்வளவாக படிக்கவில்லை. இதனால் சரிதா வேலைக்கு செல்வதும், அனில் வீட்டு வேலை பார்த்துக் கொண்டிருந்ததாகவும் தெரிகிறது.

இவர்கள் இருவரும் சில ஆண்டுகள் சந்தோசமாக குடும்பம் நடத்தி வந்தனர். அதன்பின் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அனிலை சரிதா வீட்டை விட்டு வெளியே விரட்டி விடப்பட்டார். எந்த வேலையும் இல்லாத நிலையில், தங்குவதற்கு வசிப்பிடம் இல்லாமல் தெருவில் அலைந்து திரியும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து அனில் சோலாப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையில் எனக்கு திருமணமானதிலிருந்து என்னை அனைது வீட்டு வேலைகள் செய்ய வைத்தார். அதோடு பலமுறை அடித்ததோடு கொடுமைகள் செய்தார். ஒரு கட்டத்தில் என்னை வீட்டிலிருந்து வெளியேற்றி விட்டார். இதனால் எனக்கு உதவித்தொகை வழங்கிட உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார் அனில்.

விசாரணையின் முடிவில் , நீதிபதிகள் அனிலுக்கு மாதாமாதம் ரூ.2000 உதவித் தொகை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.