Couple fight: மணமேடையில் சண்டையிட்டு கொண்ட மணமக்களின் வீடியோ, இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
உலகின், எங்கோ ஒரு மூலையில் நெகிழ்ச்சியான, சில விசித்திரமான,வேடிக்கையான, சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது. இன்றைய நவீன உலகில், பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள எல்லாவற்றிக்கும் ஆன்லைனில் பதிவிடுவது, ட்ரெண்ட் ஆகி வருகிறது.
அவை சில சமயங்களில், நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கும், சில வீடியோ நமக்கு கோபத்தை தூண்டும், சிலவற்றை வேடிக்கையாக கடந்து செல்வோம். அப்படியான ஒரு வேடிக்கையான நிகழ்வு அரங்கேறியுள்ளது.

சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. இந்திய திருமணங்களுக்கு பல சிறப்பம்சங்கள் உள்ளன. அட்டகாசமான நடன அசைவுகள், கிண்டல் கேலிகள், கலாட்டா நிகழ்வுகள் என நமது திருமணங்களில் பல சுவாரசியமான நிகழ்ச்சிகள் நடப்பதுண்டு.
பொதுவாக தன்னுடைய திருமணத்தில் தன்னுடைய வருகை ஒரு பிரம்மாண்டமான முறையில் இருக்க வேண்டும் என திருமணம் புரிந்துகொள்ளும் மணமகள் நினைப்பது வழக்கம். வெட்கப்பட்டு, குனிந்த தலையுடன் தான் மணமகள் இருக்க வேண்டும் என்ற சிந்தனை பழங்கால சிந்தனையாகி விட்டது.
இப்பேதெல்லாம் பல திருமணங்களை புரோகிதர்களுக்கு பதிலாக போட்டோகிராபர்களால்தான் நடத்துகிறார்கள் என சிலர் கிண்டலாகக் கூறுகிறார்கள்.
தற்போது மணம் புரியும் பெண்கள், வழக்கமான பாணியை புறக்கணித்து புதுப்புது விதங்களில் திருமண நாளை அனுபவிக்க ஆசைப்படுகிறார்கள். பொதுவாக திருமணங்களில் உறவினர்கள் கோபப்படுவது வழக்கம். ஆனால் தற்போது ஒரு திருமணத்தில் மணமகனும், மணமகளுமே கோவம் கொண்ட ஒரு செய்தி வைரல் ஆகி வருகின்றது.
அந்த வீடியோவில்,ஆசையாக மணமகள் காத்திருக்க மணமகன் திருமண மண்டபத்துக்கு மிகவும் தாமதமாக வருகிறார். இதனால் கடுப்பான மண்மகள் திருமணத்திற்கு வந்துள்ள அனைத்து விருந்தினர்களுக்கும் முன்னால் அவர் மீது கோவப்படுகிறார். மணமகளின் கோவத்தால் ஆத்திரமடையும் மணமகனும் மணமகள் மீது கோவம் கொள்கிறார். சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவிற்கு பலரும் தங்கள் கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
