ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய வந்த 370 ஆவது பிரிவை ரத்து செய்த பிரதமர் மோடியின் மிகப் பெரிய தைரியமான அதிரடி முடிவுக்கு முன்னாள் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ,அருண் ஜெட்லி ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

370 ஆவது பிரிவு நீக்கப்படுவதாக இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அப்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதாக அறிவித்திருந்தார்.

இந்த அதிரடி முடிவுக்கு பாஜக எம்பிக்கள் மற்றும் பாஜக விற்கு ஆதரவு தரும் கட்சிகள் பாராட்டி வரவேற்றனர். இருந்தபோதிலும் எதிர்க்கட்சிகள் வலுவான எதிர்ப்பை காட்டியது. இப்படியுமான ஒரு சூழ்நிலையில் முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்து ஒரு பதிவிட்டு உள்ளார்.

"இந்த முடிவு வரலாற்று சிறப்புமிக்க முடிவு; தைரியமான முடிவு; இந்தியாவிற்கு எங்கள் வணக்கம்..! என தெரிவித்துள்ளார். இதேபோன்று அருண் ஜெட்லி வெளியிட்டுள்ள பதிவிலும், "ஒரு வரலாற்று தவறு சரி செய்யப்பட்டுள்ளது; இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி 378 பிரிவை பின்பற்றாமல் 35 ஏ பிரிவு பயனப்டுத்தி பின் கதவு வழியாக பின்பற்றப்பட்டது; எனவே இது ரத்து செய்ய வேண்டிய பிரிவு தான்; இப்படி ஒரு வரலாற்று தவறை சரி செய்வதற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடிக்கு எனது வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்து, மீண்டும் 2 ஆவது முறையாக பிரதமராக பதவி ஏற்று உள்ள நரேந்திர மோடி சென்ற ஆட்சியின் போதே  ஜிஎஸ்டி, நீட், பணமதிப்பிழப்பு, மேக் இன் இந்தியா, டிஜிட்டல் பரிவர்த்தனை என பல்வேறு வரலாற்று  சிறப்பு மிக்க முடிவை எடுத்து உலக நாடுகளை இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.

இந்த நிலையில், ஆட்சி ஏற்று 2 மாதமே ஆன நிலையில், 72 ஆண்டு காலமாக இருந்து வந்த காஷ்மீர் குறித்த வரலாற்று பிரச்சனைக்கு தீர்வு காணும் விதத்தில், இப்படி ஒரு அதிரடி முடிவை எடுத்து அறிவித்துள்ளது ஒரு வரலாற்று தவறை சரி செய்து .. இன்னொரு வரலாற்றையே படைத்து உள்ளனர் மோடி அண்ட் அமித்ஷா.!