Asianet News TamilAsianet News Tamil

டேய் என்னடா சொல்றீங்க... மனிதர்கள் வாயுவை வெளியேற்றினால் கொரோனா தொற்ற வாய்ப்பு..? ஆய்வில் அதிர்ச்சி..!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா இருமல், தும்மல், தண்ணீரால் பரவுவதாக கூறியதையடுத்து தற்போது  மனிதர்கள் வாயுவை வெளியேற்றினாலே கொரோனா தொற்ற வாய்ப்பு இருப்பதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

coronavirus be spread through farts? Australian researcher
Author
Australia, First Published Apr 23, 2020, 6:10 PM IST

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா இருமல், தும்மல், தண்ணீரால் பரவுவதாக கூறியதையடுத்து தற்போது  மனிதர்கள் வாயுவை வெளியேற்றினாலே கொரோனா தொற்ற வாய்ப்பு இருப்பதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

சீனாவின் பிறப்பிடமான கொரோனா வைரஸ் தற்போது 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றனர். அதேவேளையில், கொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்று தினம் தினம் ஒரு தகவல் வெளியாகி வருகிறது. முதலில் கொரோனா வைரஸ் காற்றில் பரவும், பல்வேறு பரப்புகளில் தங்கியிருந்து மனிதர்களை தொற்றும் என பல விதமான பரவும் விதங்கள் குறித்து தினம், தினம் ஒரு ஆராய்ச்சி முடிவில் தெரிய வருகிறது. இதுவரையில் தும்மல், இருமல், எச்சில் துப்புதல், கைகளை தொடுதல் போன்றவற்றால்தான் கொரோனா பரவும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

coronavirus be spread through farts? Australian researcher

இந்நிலையில், பிரான்ஸ் தலைநகர் பாரீசில், சாலைகளை கழுவும் தண்ணீரிலும் புதிய வகை கொரோனா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இது இப்படி இருக்க கொரோனா நோயாளிகளிடம் புதுவித ஆய்வு ஒன்றும் மேற்கொள்ளப்பட்டது. அதாவது, கொரோனா நோயாளிகள் அனைவரின் கழிவுகளிலும் வைரஸ் இருந்தன. அவர்களின் மலம், சிறுநீர் ஆகியவற்றில் இந்த வைரஸ் இருப்பதால், நோயாளிகள் தனி கழிவறை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. இப்படி மலத்தில் கழிவுகள் இருக்கும்போது, அவர்களின் உடலில் இருந்து வெளியேறும் வாயுவில் வைரஸ்கள் இருக்காதா என்று ஆய்வு நடந்தது. ஆஸ்திரேலியாவில் நடந்த இந்த ஆய்வில் அதிர்ச்சி முடிவுகள் வெளியாகி உள்ளன. இந்த ஆராய்ச்சியில் கொரோனா நோயாளிகளில் 55 சதவீதத்துக்கும் மேற்பட்டோரின் மலத்தில் வைரஸ் இருந்தது.

coronavirus be spread through farts? Australian researcher

எனவே அவர்கள் வாயுவை வெளியே விடும்போது, அதை நீண்ட தூரத்திற்குக் கொண்டு செல்ல முடியும் என்று தெரியவந்துள்ளது. தெரிய ஊகிக்கப்படுகிறது. அதாவது சம்பந்தப்பட்ட நபர், ஜட்டி மற்றும் பேன்ட் அல்லது வேறு ஆடை போட்டிருக்கும்பட்சத்தில் வைரஸ்கள் அதிலேயே தடுக்கப்பட்டு விடும். ஜட்டி அல்லது இறுக்கமான ஆடைகள் இல்லாமல் சாதாரண ஆடை இருந்து அதன் மூலம் வாயு மிக எளிதாக வெளியே வரும்படி இருந்தால், அதனால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே தொடர்ந்து இதுதொடர்பாக ஆய்வு நடைபெற்று வருகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios